Advertisement

உங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்!

உங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்!

குழந்தைங்க வீட்ல இருக்கும் போது, விதவிதமாகக் சாப்பிடனும்னு ஆசை படுவாங்க. உங்க வீட்ல பிரெட் மட்டும் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கின்ற மற்ற பொருட்களை வைத்தே, சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு பிரட் கட்லட் எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

bread-cutlet

பிரெட் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 6

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் – தேவையான அளவு பொடியாக வெட்டி கொள்ளவும்.

தனி மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், கோதுமை மாவு 3 டேபிள் ஸ்பூன். (உங்கள் வீட்டில் டொமெட்டோ சாஸ், சில்லி சாஸ் இருந்தால் இரண்டிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.) தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒவ்வொரு பிரட்டாக எடுத்து, தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி இருந்தால் அதை வேக வைத்தும் இதில் போட்டுக் கொள்ளலாம்.

bread-cutlet1

அதன் பின்பு, தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அரிசி மாவு, கோதுமை மாவு, சேர்த்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொத்தமல்லி தழை தூவி, தண்ணீர் ஊற்ற வேண்டாம். அப்படியே நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிரெட் ரோஸ்டில் இருக்கும் ஈரத் தன்மையும், வெங்காய தக்காளியில் இருக்கும் ஈரமுனே போதுமானது. இது கட்லட் மாவு பதத்திற்கு வந்துவிடும்.

உங்கள் வீட்டில் முட்டைகோஸ், கேரட் இப்படி உங்களுக்கு பிடித்த காய்கறிகளையும் இதில் சேர்த்துக் கொண்டால் தவறில்லை. அது உங்கள் விருப்பம் தான். தயார் செய்த இந்த மாவை ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிடுங்கள்.

bread-cutlet2

அதன் பின்பு உங்களது கைகளில் சிறிது எண்ணெய் தொட்டு, அந்த மாவை, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி மசால் வடை தட்டுவது போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தாலே போதும். சுவையான கட்லெட் தயார். டீப் ஃப்ரை செய்து எடுக்கும் போது மொறு மொறுவென்று மாறிவிடும். மிதமான தீயில் வைத்து சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.