நீண்ட நாட்களாக மூட்டு வலியில் அவதிப்பட்டு வருகிறீர்களா? 7 நாட்களில் நிரந்தர தீர்வு தரும் குறிப்பு.
முந்தைய காலங்களில் எல்லாம், வயதானவர்களுக்கு தான் மூட்டுவலி வரும். இப்போது 30 வயதை தொடுவதற்கு முன்பாகவே, மூட்டுவலியில் பெரும்பாலானவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மூட்டு வலி வருவதற்கு என்ன காரணம், இந்த மூட்டு வலியை நிரந்தரமாக சரிப்படுத்த என்ன செய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ள போகின்றோம். இயற்கையான முறையில் இந்த குறிப்பை பின்பற்றுவதன் மூலம் நமக்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
நம்முடைய உடலில் யூரிக் அமிலம் என்ற ஒரு திரவம் அதிகமாக சுரப்பதன் மூலமாகத்தான் மூட்டுவலி ஏற்படுகிறது. பொதுவாக இந்த யூரிக் அமிலம், சிறுநீரகத்தின் வழியாக வெளியேறிவிடும். அப்படி சரியான முறையில் வெளியேறாத பட்சத்தில் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக தங்கிவிட்டால், மூட்டுவலி கட்டாயம் வரும். இந்த யூரிக் அமிலத்தை நம் உடம்பில் இருந்து முழுமையாக வெளியேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதற்கு, நமக்கு முக்கியமாக தேவைப்படும் பொருள் பச்சை பப்பாளி. பப்பாளி, பழம் ஆவதற்கு முன்பு, இருக்கக்கூடிய பச்சை பப்பாளியை தான் இந்த குறிப்பில் பயன்படுத்த போகின்றோம். பச்சை பப்பாளி சூப் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
பச்சை பப்பாளியை சிறு துண்டுகளாக ஒரு 1 கப் அளவு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் 6 (சாம்பார் வெங்காயம்) – தோலுரித்து பொடியாக நறுக்கியது. பூண்டு – 4 தோலுரித்து (ரசத்துக்கு நைய்ப்பது போல், ஒன்றிரண்டாக நிச்சுக்கொள்ளுங்கள்.) மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக கல் உப்பு – 2 சிட்டிகை. கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். 200ml தண்ணீர் எடுத்துக் கொண்டால் போதும். அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சைப் பப்பாளித் துண்டுகளை சேர்க்கவும். அடுத்ததாக தயார் செய்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சீரகப் பொடி, எல்லாவற்றையும் சேர்த்து, இறுதியாக உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக வைத்தால் போதும்.
இந்த பப்பாளிக்காயானது முழுமையாக வெந்து விடக்கூடாது. கடித்து சாப்பிட்டால் நறுக்கென்று இருக்கவேண்டும். முழுமையாக வெந்து கொழகொழவென்று ஆக கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அடுப்பிலிருந்து இந்த சூப்பை தனியாக பவுலில் மாற்றி, அதில் கொத்தமல்லி தழையை தூவினால், மூட்டுவலியை சரிப்படுத்தும் பச்சை பப்பாளிக்காய் சூப் தயார்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தாராளமாக இந்த சூப்பைக் குடிக்கலாம். 7நாட்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள், மூட்டு வலியில் நல்ல முன்னேற்றம் கட்டாயம் தெரியும். அதன் பின்பு, 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த சூப்பை குடித்தால் மூட்டு வலி நிரந்தரமாக வராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பப்பாளி காயில் விட்டமின் ஏ, சி, ஈ, கே, அடங்கியுள்ளது. சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் சத்து முட்டி வலியை நீக்குவதற்கு மிகவும் உபயோகமானது. இந்த சூப்பை குடிப்பதன் மூலம் முட்டிவலி நீங்குவது மட்டுமல்லாமல், நம் உடலில் இருக்கும் நரம்புகளும் வலுப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையான முறையில், எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் மூட்டுவலிக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம்.