Advertisement

நம்முடைய எந்த செயல்கள் நம் நோய்க்கு காரணமாக இருக்கும் என்று ‘ஆன்மிகம்’ சொல்கிறது தெரியுமா?

நம்முடைய எந்த செயல்கள் நம் நோய்க்கு காரணமாக இருக்கும் என்று ‘ஆன்மிகம்’ சொல்கிறது தெரியுமா?

மனிதர்களாக பிறந்த ஒவ்வொரு உயிரும் பிறக்கும் பொழுது ஒரே மாதிரியான குணாதிசயங்களுடன் தான் பிறக்கின்றன. ஆனால் அது வளரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தான் கற்கும் பாடங்களை வைத்து தன்னுடைய குணாதிசயத்தை வளர்த்துக் கொள்கிறது. இதுவே மனிதனுக்கு மனிதன் குணங்கள் வெவ்வேறாக மாறுபடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதுபோல் இருக்கும் சூழ்நிலையில், சில குணத்திற்கு அதாவது நாம் செய்யும் சில செயல்களுக்கு நோய்களை உண்டாக்கும் ஆற்றலும் உண்டாம் என்கிற அதிர்ச்சித் தகவலை ஆன்மிகம் வாயிலாக கூறப்பட்டதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Water

உயிர் வாழ்வதற்கு முக்கியமாக இருப்பது தண்ணீர். அந்தத் தண்ணீர் ஒரே குணத்தை கொண்டிருந்தாலும் அதை நாம் கொண்டு போய் வைக்கும் இடத்தை பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அடுப்பில் கொண்டு போய் வைத்தால் சூடாகவும், பிரிட்ஜில் கொண்டு போய் வைத்தால் ஜில்லென்றும் மாறுகிறது அல்லவா? அது போல் தான் செய்யும் செயல்களால் நம் உடலில் சில மாற்றங்கள் நிகழும் என்கிறது ஆன்மீகம்.

ஒரு சிலருக்கு தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பு இருக்கும். தனக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியாது என்ற கர்வம் இருக்கும். மற்றவர்களை விட நாம் ஒரு படி மேலே நிற்கின்றோம் என்கிற ஆணவமும், பெருமையும் அதிகமாக இருக்கும். இது போன்று தலைகணம் கொண்டு தான் சிறந்தவர் என்ற நினைப்பில் வாழ்பவர்களுக்கு விரைவாக இதயநோய் தாக்கும் என்கிறது ஆன்மீகம்.

heart attack

அதுபோல ஒரு சிலருக்கு எதற்கெடுத்தாலும் அதிக உணர்ச்சி வசப்படும் தன்மை உண்டு. சின்ன விஷயம் நடந்தாலும் உடனே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். துக்கமும், துயரமும் தொண்டை அடைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழும் மனநிலை கொண்டவர்கள் இவர்கள். இவர்களால் எதையும் தனியாக எதிர்கொள்ள முடியாமல் போகலாம். அதனால் இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு என்கிறது ஆன்மீகம்.

சதா அழுகை அழுகை என்று வாழ்க்கையில் வெறுமையை அனுபவித்தவர்களுக்கு சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நிச்சயம் வரும் என்று கூறப்படுகிறது. அழுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் யாரும் கற்றுக் கொடுக்கப் போவதில்லை. நமக்கு நாம் தான் ஆசான் என்பதை முதலில் இவர்கள் உணர வேண்டும்.

breath-moochu-thinaral

எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதைப் பார்த்தாலும் பயம் இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு இருக்கும் என்றால் சிறுநீரக பிரச்சனை வரும் வாய்ப்புகள் அதிகம் உங்களுக்கு உண்டு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் என்பது மனநோய். உங்கள் நோயால் பாதிக்கப்படுவது உங்கள் அன்புக்குரியவர் தான். வேறு யாருமே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

அடிக்கடி கோபப்படுபவர்கள், எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுபவர்கள் சதா டென்சன் டென்சன் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும் என்கிறது ஆன்மீகம்.

liver-kalleeral

அமைதியாக எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த நோயும் தாக்குவதில்லை அப்படியே அவர்கள் நோய்வாய் பட்டாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வந்து விடுவார்கள் என்கிறது ஆன்மீகம். நாம் என்ன சிந்திக்கிறோமோ! எதைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் இருக்கிறோமோ! அதைப் பொறுத்து தான் நம்முடைய உடலில் சில சுரப்பிகள் சுரக்கப்படுவது உண்டு. மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நல்ல சுரப்பிகளும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையில் இருக்கும் பொழுது அமிலம் போன்ற ஒவ்வாத சுரப்பிகளும் உடலில் சுரக்குமாம். இதனால் மனம் மட்டுமல்லாமல் உடலும் தீவிரமாக பாதிப்படையும்.

happy-family

இதை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அவர்களுடைய மனநிலை முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவர்கள் நல்ல வழியில் நல்ல சிந்தனையுடன் செல்வதும், தீய எண்ணங்களை அவர்களுக்குள் விதைப்பதும் பெற்றோர்களாகிய நீங்கள் தான். நல்ல செயல்கள் நல்ல சந்ததியையும், ஆரோக்கியத்தையும் எப்போதும் தரும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.