உங்கள் முகத்தை தொட்டாலே சொர சொரவென்று இருக்கிறதா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க! சும்மா வழுக்கிட்டு போகும்.
சிலரது முகத்தை பார்க்கும் பொழுது அவ்வளவு ஆசையாக இருக்கும். அவர்களது கன்னத்தை அப்படியே கிள்ளி விடலாம் போலிருக்கும். அவர்களை போல எந்த சொரசொரப்பு தன்மையும் இல்லாமல், மாசு மருவற்ற சருமம் கொண்டிருக்க நமக்கும் ஆசை தான். ஆனால் நம்முடைய சுற்றுச்சூழல், நாம் உண்ணும் உணவு நம்முடைய சருமத்தை மிருதுவான தன்மையிலிருந்து சொரசொரப்பு தன்மைக்கு மாற்றிவிடுகிறது. இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற தொந்தரவுகளும் வந்துவிடுகிறது. இவைகள் காலப்போக்கில் நீங்கினாலும் அதன் வடுக்கள் மறைவதில்லை நாம் சாகும் வரை அப்படியே நம்முடன் படிந்து விடுகிறது.
ஆனால் இந்த சில குறிப்புகளை பயன்படுத்தினால் உங்களது முகம் பளிங்குபோல் எப்போதும் மின்னிக் கொண்டிருக்கும். மாசு மரு இல்லாமல் மேனி பட்டுப்போல் வளவளவென்று இருக்கும். இதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியம் கூட இல்லை. இரண்டே இரண்டு பொருள்களை வைத்து உங்கள் முகத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் அதிக செலவு செய்ய தேவையில்லை. எதையும் கடைகளில் போய் காசு கொடுத்து வாங்கவும் தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சி முறை தான் இது.
உங்கள் வீட்டில் கற்றாழைச் செடி, வேப்பமரம் இருக்கிறதா? இந்த இரண்டு தாவர வகை இருந்தால் போதும். நீங்களும் திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு ஜொலிப்பீர்கள். பிறகென்ன உங்கள் தன்னம்பிக்கையும் உயர்ந்து, உங்கள் வாழ்கை தரமும் முன்னேற்ற பாதையில் செல்லும். நாம் அழகாக இருப்பது மற்றவர்களை கவர்வதற்கு அல்ல. நம்மை நாம் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் எதையும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதற்கு தான் அலங்கரித்து கொள்கிறோம். அதை செயற்கை முறையில் நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறையில் கையாள கற்றுக் கொள்ளுங்கள்.
கற்றாழை எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை எப்பொழுதும் சருமத்திற்கு தேவைப்படுகின்ற ஒரு முக்கிய பொருள். கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு பத்து முறை தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் அதில் இருக்கும் அரிப்பு தன்மை நீங்கி விடும். அதன்பிறகு அந்த ஜெல்லை கைகளால் பிசைந்து பசை போன்ற திரவத்தை வெளியே எடுங்கள். அதனுடன் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இது முகத்திற்கு ஸ்கரப் செய்ய பயன்படும்.
எந்தவிதமான கருமை சருமம் இருக்கும் இடங்களில் நீங்கள் இதை ஸ்கிரப்பர் போல் பயன்படுத்தி ஸ்கரப் செய்தாலும் அதன் சொரசொரப்பு தன்மை, உங்கள் சருமத்தில் படிந்து இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பருக்களை உண்டாக்கக்கூடிய கிருமிகள் போன்றவற்றை நீக்கிவிடும். உங்கள் சருமம் நீங்க எதிர்பார்த்தது போல் நைசாக இருக்கும். இது ஆண் பெண் என்று யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இதேபோல் மற்றொரு முறை அந்த ஜெல்லுடன் சர்க்கரைக்கு பதிலாக வேப்பிலை சாற்றை சில சொட்டுக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வேப்பிலையும் கற்றாழை ஜெல்லையும் நன்றாக கலந்து கொள்ளவும். உண்மையில் இது உங்கள் சருமத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ஒரு கலவை. இதை தினமும் முகம் முதல் கழுத்து வரை தடவிக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் போய் முகத்தை கழுவி விட்டு வாருங்கள். அவ்வளவுதான் இந்த இரண்டு முறைகளையும் தொடர்ந்து நீங்கள் செய்து பாருங்கள். அடுத்த ஒரே மாதத்தில் நீங்கள் உங்களது சருமம் சொரசொரப்பு தன்மை நீங்கி, கருமை நீங்கி, மாசு மருவற்ற மென்மையான அழகிய சருமத்தை உணர்வீர்கள்.