Advertisement

சூப்பர் உருளைக்கிழங்கு வருவல். பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம்! செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்.

சூப்பர் உருளைக்கிழங்கு வருவல். பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம்! செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்.

எல்லோருக்கும் பிடித்தமான உணவு பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை வைத்து பலவகையான குறிப்புகள் இருந்தாலும், ஒரு முறை உருளைக்கிழங்கை இந்த முறையில் வறுவல் செய்து பாருங்கள். தயிர் சாதம், சாம்பார் சாதம், பருப்பு சாதம் இவைகளுக்கு சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சுலபமான முறையில் சூப்பர் உருளைக்கிழங்கு வருவல் எப்படி செய்வது? பார்த்து விடலாமா! செய்யும் போதே நாக்கு ஊருங்க!

potato-urulai

உருளைக்கிழங்கு வருவல் செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு பெரியது – 1, கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு –  தேவையான அளவு, உலர்ந்த மாங்காய் தூள் – 1/2 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன், (சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாதவர்கள், மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி விட்டு சேர்த்துக்கொள்ளலாம் அல்லது மிளகாய்த் தூளும் போட்டுக்கொள்ளலாம்.) புதினா தழை – 2 கொத்து, லெமன் ஜூஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் அளவு (பாதி எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி கொள்ளலாம்).

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து வட்ட வடிவமாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டும் அளவு 3mm தடிமன் இருக்க வேண்டும். அதாவது 1/2 இன்ச் தடிமன். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து விட்டு, 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, வட்ட வடிவில் வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை இரண்டு பக்கமும் சிவப்பு நிறம் வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

potato-round-fry

ஒரு அகலமான கடாயில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, போட்டு வதக்கி, அதன் பின்பு வறுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொள்ளுங்கள். அதன் பின்பாக தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்க வேண்டும். அதன் பின்பு மாங்காய் தூள்(ஆம்ச்சூர் பவுடர் என்று சொல்லுவார்கள்) 1/2 ஸ்பூன் அளவு சேர்க்க வேண்டும். அடுத்ததாக சில்லி ஃப்ளேக்ஸ் 1/2 ஸ்பூன் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

potato-round-fry1

இறக்குவதற்கு முன்பாக புதினா தழைகளை உருவி சேர்த்து, ஒரு முப்பது செகண்ட்ஸ் நன்றாக கிளறி விட்டு, உருளைக்கிழங்கை இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு, எலுமிச்சை பழத்தை எடுத்து, உருளைக்கிழங்கு வருவலின் மேல், சாரு பிழிந்து 30 செகண்ட்ஸ் வரை கிளறி விட்டு, கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி, இறக்கி விட்டீர்கள் என்றால் சுவையான, சூப்பரான, வாசனையான நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உருளைக்கிழங்கு வறுவல் தயார். முக்கியமா பேச்சிலர்ஸ் ஈசியா செஞ்சி சுப்பரா சாப்பிடலாம்.