Advertisement

பருப்பே வேண்டாம். இட்லி, தோசைக்கு 10 நிமிஷத்துல ஹோட்டல் டேஸ்ட்ல சூப்பர் சாம்பார் ரெடி பண்ணிடலாம்!

பருப்பே வேண்டாம். இட்லி, தோசைக்கு 10 நிமிஷத்துல ஹோட்டல் டேஸ்ட்ல சூப்பர் சாம்பார் ரெடி பண்ணிடலாம்!

சாம்பார் என்றாலே பருப்பை வேகவைத்து வைப்பது தான். ஆனால், பருப்பு இல்லாமல் சுவையான ஹோட்டல் சாம்பார் வைக்க முடியுமே! இதை சாப்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் இப்படி பலகார வகைகளுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சாம்பாரை எப்படி வைப்பது? அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

sambar

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

கடலைமாவு-2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம்-10 தோல் உரித்தது, பெரிய வெங்காயமாக இருந்தால்-1 நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும், பழுத்த தக்காளி பெரியது – 2 கொஞ்சம் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும், பச்சை மிளகாய்-2 (நான்கு துண்டுகளாக வெட்டி, குறுக்கு பக்கமாக வெட்டி கொள்ள வேண்டும்), பெருங்காயம்-2 சிட்டிகை, சாம்பார் பொடி – 1ஸ்பூன், வர மிளகாய்-2, சீரகம்-1/2 ஸ்பூன், கடுகு-1/4 ஸ்பூன், குழம்பு மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன், கருவேப்பிலை-ஒரு கொத்து, கொத்தமல்லி தழை-சிறிதளவு பொடியாக வெட்டி கொள்ளவும்.

முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை, பெரிய அளவு டம்ளரில், 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் சிறிய வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு வதக்க வேண்டும். அதன்பின்பு நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு கொள்ளுங்கள், அதன் பின்பு தக்காளியை போட வேண்டும். பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும்.

kadalai-maavu

இப்போது கரைத்து வைத்திருக்கும் கடலைமாவை கடாயில் ஊற்றி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். குழந்தைக்கு தேவையான உப்பு, சாம்பார் பொடி, அல்லது (உங்கள் வீட்டில் மிளகாய் பொடி தனியா பொடி இருந்தால் அதை கூட சேர்த்து கொள்ளலாம்) மஞ்சள் தூள் சேர்த்த பின்பு, அடுப்பை வேகமாக வைத்து 3 நிமிடங்கள் வரை குழம்பு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். ஒருமுறை நன்றாக கலக்கி விடுங்கள்.

மூன்று நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, குழம்பை மூடி விடுங்கள். குழம்பு தண்ணீர் பதத்தில் தான் இருக்க வேண்டும். ஆறிய பின்பு கெட்டித் தன்மை வந்துவிடும். சரியாக 30 நிமிடம் வரை குழம்பு மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.

sambar-thalippu

இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து குழம்பில் கொட்டி விடவேண்டும். கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் போதும் சூப்பர் சாம்பார், கமகம சாம்பார் ரெடி.

ஒரு சின்ன பின் குறிப்பு: இந்த சாம்பாருக்கு பச்சை மிளகாய் காரம் தூக்கலாக இருக்க வேண்டும். மிளகாய் தூள் காரம் குறைவாக இருக்க வேண்டும். உங்களுடைய காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாயை கூடுதலாகவும் சேர்த்துக் கொள்ளலாம். கடலை மாவின் பச்சை வாடை போகும் அளவிற்கு பக்குவமாக குழம்பை கொதிக்க வையுங்கள். சாம்பார் மிகவும் கெட்டித்தன்மை வருவதாக இருக்கும் பட்சத்தில், சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடலாம் தவறில்லை.