இதை தடவினா, வழுக்கையா இருக்கற தலையில கூட முடி வளர ஆரம்மிச்சுடும். அவ்வளவு சக்தி இருக்குது இந்த 2 பொருளுக்கும்.
நிறைய பேரோட தலையில நடுவுல சொட்டை தெரியும். முன் நெற்றியில் வழுக்கை விழுந்து விடும். இப்படியாக ஆங்காங்கே முடி உதிர்வு ஏற்படும். முடியின் அடர்த்தி குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனை கொண்டவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்களும், இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்ய நாம் பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருட்கள் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு சிறிதளவு வெந்தயமும், நாட்டு மருந்து கடைகளில் விற்கும் நெல்லிக்காய் தூள் மட்டுமே போதும். சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக ஆற விட்டு விடுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தூளிருக்கு, ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் வீதம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி, பேஸ்ட் போல் குழைத்து, குறிப்பிட்ட இடத்தில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை இருந்தால், அந்த இடத்தில் மட்டும், இந்தப் பேஸ்ட்டை தினந்தோறும் தடவி வரலாம்.
ஒரு சிலருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த விழுதை தலை முழுவதுமாக, மயிர் கால்களில் படும்படி தடவி, மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து விடலாம். இப்படி தொடர்ந்து செய்துவர உங்களது மூடி கூடிய விரைவில் அடர்த்தியாக வளரும். முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
முடி கருமையாக வேண்டும் என்று நினைப்பவர்கள், வெள்ளை முடி அதிகமாக இருப்பவர்கள், இந்த விழுதில் சிறிதளவு அவுரி பொடி தூள் அல்லது மருதாணி இலை பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை. இது ஒரு சுலபமான குறிப்பு. விரைவாக நல்ல பலன் தரும் குறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.