Advertisement

முடி கொட்டுவது நிற்கவும், அதிவேக முடி வளர்ச்சிக்கும் 3 ரூபாய் போதுமே!

முடி கொட்டுவது நிற்கவும், அதிவேக முடி வளர்ச்சிக்கும் 3 ரூபாய் போதுமே!

முடி கொட்டுவது என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் கவலை இது. இதற்கு மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறது. முடிக்கு தேவையான ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ள காஃபீ பவுடரை கொண்டு முடிக்கு ஊட்டச்சத்து அளிக்க முடியும். முடி கொட்டுவதை ஒரே வாரத்தில் குறைத்து மீண்டும் முடி வளர்ச்சியை தூண்டக் கூடிய எளிதான டிப்ஸ் இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

cofee-powder

முடி கொட்டுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணமாக நிலத்தடி நீர் உப்பாக மாறியதும் ஆகும். அதிக மக்கள் நெருக்கம் காரணமாக நிலத்தடி நீர் உப்பு தன்மையுடன் காணப்படுகிறது. இந்த நீரில் தலை முடியை அலசும் போது முடி உதிர்வு ஏற்படுகிறது. உண்ணும் உணவிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. சரியான சரிவிகித உணவு பழக்கம் நமது முன்னோர்களிடம் இருந்து வந்தது. இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டதும் முடி வளர்ச்சி தடைபடுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஒரு பொருளை வாங்க கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் போதும் உங்களுக்கு. நடந்து சென்று வாங்கி விட்டால் உடம்பு தேறிவிடும் அல்லவா? இதனை நம்மால் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் மக்கள் யாரும் இதனை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. உங்கள் அலட்சியம் பல வியாபார முதலாளிகளுக்கு லாபமாக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் அலட்சியம், சோம்பேறித்தனம். மக்களின் சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி மிகப் பெரிய அளவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் நாட்டில் பல தொழிற்சாலைகள் புதிதாக முளைத்துள்ளன. இதனால் வேலை வாய்ப்பும் பெருகியுள்ளது. ஆனால் இது ஆரோக்கியமான வளர்ச்சி இல்லை.

hair-pack

சரி நாம் தலை முடி பிரச்சனைக்கு வருவோம். முடி வளர்ச்சிக்கு இந்த பேக் செய்து மண்டை ஓட்டு பகுதியில் தடவி வைத்து அலசினால் முடியின் வேர்கால்களுக்கு வலிமை கிடைத்து வேகமாக வளர உதவி செய்யும். இதற்கு தேவையான பொருட்கள். இன்ஸ்டண்ட் காஃபீ பவுடர் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் காஃபீ பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 3 பொருட்களையும் 5 நிமிடம் வரை பிளண்ட் செய்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஷ்டை உங்கள் தலை முடியில் வேரில் படும்படி தடவி ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சாதாரண ஷாம்பூ கொண்டு தலையை குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள். சுடு தண்ணீர் உபயோகப்படுத்த வேண்டாம். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் போதும் உங்களது தலை முடி பிரச்சனை 2 மாதத்திற்கு உள்ளாக தீர்வதை நீங்கள் கண்கூடாக காண முடியும். காஃபீ பவுடரில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட், தயிரில் இருக்கும் ப்ரோட்டீன், ஆமணக்கு எண்ணையில் இருக்கும் சத்துக்கள் சேர்ந்தால் முடிக்கு தேவையான ஆரோக்கியம் கிடைத்து விடும்.

Murungai keerai

நல்ல சத்துள்ள உணவை உண்ணுங்கள். முருங்கை கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஈரத்துடன் தலை வாருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மிகவும் டைட்டாக தலையை பின்னக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறை சிக்கு எடுத்து வாரினால் போதும். அடிக்கடி இதுபோல் தலையை வாரிக் கொண்டே இருக்க கூடாது. தினமும் கட்டாயம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்தால் தலை முடி பட்டு போன்று காட்சியளிக்கும். கொத்து கொத்தாக முடி உதிர்வது நின்றுவிடும். வேகமாக வளர்ந்து பழைய நிலைக்கு வந்து விடும்.