Advertisement

கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் 3 நாட்களில் மறைந்து போகும்! இப்படி செஞ்சு பாருங்க.

கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் 3 நாட்களில் மறைந்து போகும்! இப்படி செஞ்சு பாருங்க.

முகம் முழுவதும் தெளிவாக, அழகாக இருக்கும் போது, கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் அந்த அழகை குறைத்து காண்பிக்கும். நோயாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இந்த கருவளையத்தை, சுலபமான முறையில் எப்படி நீக்கலாம்? என்பதை பற்றியும், அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். லேசாக இருக்கும் கருவளையமானது, மூன்றே நாட்களில் கட்டாயம் குறைந்து போகும். வெகு நாட்களாக படிந்திருக்கும் கருவளையம், நாள் போக்கில் குறைய ஆரம்பிக்கும்.

Eye-dark-circle

முதலில் இதற்கு தேவையானது, உங்கள் வீட்டில் நீங்கள் தினசரி பயன்படுத்தும் காபித் தூள். எந்த பிராண்ட் காப்பித்தூள் வேண்டும் என்றாலும், இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஃபில்டர் காபி தூளாக இருக்கக் கூடாது. இன்ஸ்டன்ட் காபி தூளை தான் பயன்படுத்த வேண்டும். ஒரு டம்ளர் சுத்தமான குடிநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து, இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்பு அதை நன்றாக ஆற வைக்க வேண்டும். முடிந்தால், அந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு, 1/2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு குளிர்ந்த பின்பு, எடுத்துப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. குளிர்ந்த காபி பவுடர் தண்ணீரை, 2 டேபிள் ஸ்பூன் அளவு தனியாக இன்னொரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் உள்ள தண்ணீரை பிரிட்ஜ் இல்லையே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

cofee-powder

குளிர்ந்த காபி தண்ணீரில், உங்கள் வீட்டில் இருக்கும் காட்டன் துணியையோ அல்லது பஞ்சையோ நன்றாக நனைத்து வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை முழுமையாக பிழிந்து விடக்கூடாது. அந்தத் தண்ணீர் காட்டனில் சொட்டும் அளவிற்கு இருக்க வேண்டும். கண்களை மூடி, அதன் மேல், நனைத்த காட்டனை வைத்து விடவேண்டும். அந்த காட்டன், உங்களது கண்கள் முழுவதையும் மூடும் படி வைத்து விடுங்கள். குறிப்பாக கருவளையம் இருக்கும் இடத்தில் காட்டன் படவேண்டும்.

பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்த காட்டன் துணியை எடுத்துவிட்டு, குளிர்ந்த நீரில் உங்களது கண்களை கழுவி விட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, ஐஸ் கட்டிகளை எடுத்து 5 நிமிடம் கண்களை சுற்றி மசாஜ் கொடுக்க வேண்டும். இப்படி, தினந்தோறும் இரண்டு முறை செய்யலாம்.

ice-massage

அதன்பின்பு இரவு நேரங்களில், தூங்க செல்லும் போது தினம்தோறும் பாதாம் ஆயில் 2 சொட்டு எடுத்து, அதை கண்களை சுற்றி ஐந்து நிமிடம் மசாஜ் செய்து அப்படியே விட்டு விட வேண்டும். அழகு சாதனங்கள் விற்கும் எல்லா கடைகளிலும், பாதாம் ஆயில் விற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள் காலையில் அந்த ஆயிலை கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இந்த 3 முறையை பின்பற்றி வந்தால், கருவளையம் காணாமல் போய்விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.