உங்களது சருமம் கருப்பாக இருந்தால், கவலை வேண்டாம்! சுலபமான முறையில் வெள்ளையாக மாற்றிவிடலாம். உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருள் போதும்.
பொதுவாகவே மாநிறமாக இருப்பவர்களுக்கும், கருப்பாக இருப்பவர்களுக்கும், தங்களுடைய சருமமானது மேலும் வெள்ளை நிறமாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இது இயற்கைதான். அதாவது நம்முடைய சருமத்தின் நிறத்தை விட, மேலும் பொலிவடைய என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள் பலபேர். உங்களது சருமம் கருப்பு நிறத்தில் இருந்தாலும், மாநிறமாக மாற்றிக் கொள்ள இந்த குறிப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாநிற சருமத்தைக் கொண்டவர்கள் தங்களுடைய சருமத்தை, வெள்ளை நிறமாக மாற்றிக் கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படிப்பட்ட சருமத்தை கொண்டவர்களும், இந்த குறிப்பை பயன்படுத்தினாலும் அவர்களது முகம் மேலும் பொலிவு பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதற்கான செலவும் பெரியதாக ஆகாது. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஃபேஸ் பேக்கை தயாரித்துக் கொள்ளலாம். உங்களை அழகாக மாற்றப்போகும் அந்த குறிப்பு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா?
இதற்கு தேவையான பொருட்கள்:
காய்ச்சாத பால் – 1/4 கப்
கேரட் – 2
தேன் – 2 ஸ்பூன்
முதலில் ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியை எடுத்துக் கொண்டு, காய்ச்சாத பாலில் நினைத்து, முகத்தை நன்றாக துடைத்து எடுத்து விட வேண்டும். இப்படி செய்யும்போதே, உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். நீங்கள் முகத்தை துடைத்த, வெள்ளை துணியிலேயே இதற்கான பதில் கிடைக்கும். அதன் பின்பு, உங்களது முகத்தை ஐந்து நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
அடுத்ததாக கேரட்டை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், உங்களுக்கு தேவையான அளவு காய்ச்சாத பால் ஊற்றிக் கொள்ளவேண்டும். 2 ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றாமல், காய்ச்சாத பால் சேர்த்துதான் விழுதாக தயார் செய்துகொள்வது மிகவும் நல்லது.
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்தக் கலவையை முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து உங்களது முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி விட்டால் போதும். வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறை இப்படி செய்து வரலாம். தொடர்ந்து இந்த முறையை பின்பற்றி வரும் போது, உங்களது சருமம் பொலிவுபெறும். உங்களது முகத்தில் நிற மாற்றம் ஏற்படுவதை சில நாட்களிலேயே உங்களால் உணர முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.