3 முக ருட்ராட்சம் அணிவதால் ஏற்படும் அற்புதமான பலன்கள் இதோ
சர்வ வல்லமை கொண்ட சிவபெருமானின் முழுமையான கடாட்சம் கொண்ட ஒரு ஆன்மீக வஸ்துவாக ருத்ராட்சம் இருக்கிறது. பொதுவாக ருத்ராட்சம் அணியப்படுவது ஆன்மீக காரணத்திற்காக தான் என்றாலும் ருத்ராட்சங்களில் காணப்படும் கோடுகள் அல்லது முகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ருத்ராட்சத்தின் பலன்கள் மாறுபடுகிறது. அந்த வகையில் மூன்று முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
3 முக ருத்ராட்சம் பலன்கள்
குழந்தை பாக்கியம்
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் தான் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. தற்காலங்களில் திருமணம் ஆகியும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் நிலை பல தம்பதிகளிடம் அதிகம் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அவர்களின் உடலில் ஏற்படும் பாலியல் ரீதியான குறைபாடுகள் நீங்கப் பெற்று, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவார்கள்.
புற்றுநோய்
புற்றுநோய்கள் வெளிப்புற காரணிகள் காரணமாக ஏற்படுகிறது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. அதே நேரம் நமது சக்தி உடல்களில் ஏற்படும் சில பாதகமான மாற்றங்கள் நமக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பது யோக தத்துவத்தின் அடிப்படையிலான காரணமாக நமது முன்னோர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் 3 முக ருத்ராட்சத்தை வாங்கி அணிந்து கொள்வதால் எப்படிப்பட்ட புற்று நோயையும் வெல்லலாம்.
ரத்த அழுத்தம்
30 வயதைக் கடந்து 40 வயதை நெருங்கும் பலருக்கும் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. நமது உடலில் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். இந்த இரத்த அழுத்தம் தீவிரமடையும் போது, இதய பாதிப்பு, வாதம் போன்ற நோய்த் தாக்குதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ரத்த அழுத்தம் சீரான அளவில் இருந்து உடல் நலம் மேம்படுகிறது.
மனம் சார்ந்த குறைபாடுகள்
ஒரு மனிதனின் மனம் நன்றாக இருந்தால் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நாம் அன்றாடம் காணும் மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு மனதில் குற்ற உணர்வு, மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டமான மனநிலை போன்ற பல்வேறு மனம் சார்ந்த குறைபாடுகள் இருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் 3 முக ருத்ராட்சம் அணிந்து வர மேற்கூறிய மனநலக் குறைபாடுகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியும், தன்னிறைவும் ஏற்படும்.
தாழ்வு மனப்பான்மை
நம்மை பிறருடன் ஒப்பிட்டு, அவர்களிடம் இருப்பது நம்மிடம் இல்லாததால் ஏற்படுவதே தாழ்வு மனப்பான்மை ஆகும். இந்தத் தாழ்வு மனப்பான்மை ஒருவரின் மனதில் மையம் கொண்டு விட்டால், அவரால் வாழ்வில் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அவர்கள் மனதில் இருக்கின்ற இந்த தாழ்வுமனப்பான்மை நீங்கி எதையும் சாதிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.
செவ்வாய் கிரகம்
ஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதற்கும் அஞ்சாத குணமும், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்க வீரிய சக்தியும், உடன்பிறந்தவர்களால் நன்மை பெறும் பாக்கியமும் உண்டாகும். ஜாதகத்தில் செவ்வாய் பாதகமாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம், தைரிய குறைவு, ரத்த புற்று போன்ற பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. செவ்வாய் தோஷம் நீங்கவும், செவ்வாய் பகவானின் அருள் பெறவும் மூன்று முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது.
சுறுசுறுப்பு
நவீன காலத்தில் அனைத்து வகையான தொழில் நுட்ப முன்னேற்றங்கள் உடல் உழைப்பு என்பது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மக்கள் சோம்பல் குணம் அதிகரித்து, அவர்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பு இல்லாத நிலையே இருக்கிறது. மூன்று முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு ரத்தத்தில் ஒரு விதமான உற்சாக சக்தி பாய்ந்து, உடலிலும் மனதிலும் சுறுசுறுப்புக் தன்மையை அதிகரிக்கிறது. மந்த குணத்தை அறவே போக்குகிறது.
சொந்த நிலம்
ஒருவருக்கு சொந்தமாக நிலம் இருப்பது அவரின் எதிர்காலத்திற்கு பல வகையில் உதவும். ஆனால் சொந்த நிலம் வைத்திருக்கும் பலருக்கும் அந்த நிலம் தொடர்பாக உறவினர்கள், பக்கத்து நிலத்து சொந்தக்காரர்களுடன் தகராறுகள், நீதிமன்ற வழக்குகள் வழக்குகள் என பிரச்சனைகள் ஏற்படுகிறது. தங்களின் பூர்வீக நிலத்தில் ஏற்படுகின்ற எத்தகையபிரச்சினைகளும் நீங்க பூமிகாரகனாகிய செவ்வாய் பகவானின் அம்சம் நிறைந்த மூன்று முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டு விரைவில் நிலம் உங்களுக்கு சொந்தமாகும்.
குழந்தைகள் நலம்
எந்த ஒரு குடும்பத்திற்கும் ஆதாரமான மகிழ்ச்சியாக இருப்பது குழந்தைகள் தான். பத்து வயது எட்டும் வரை குழந்தைகள் பலவிதமான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஒரு சில நோய்கள் சமயங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாகவும், அவர்களின் உடலை நிரந்தரமாக பாதிப்பதாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய ஆபத்தை தவிர்க்க, அக்குழந்தைகளுக்கு மூன்று முக ருத்திராட்சத்தை அணிவிப்பது சிறந்தது.
விபத்துக்கள்
நமது கர்ம வினை மற்றும் ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோச்சார நிலைகளால் நமக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய எதிர்பாராத விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காத்துக்கொள்ள மூன்று முக ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்து கொள்வது நல்லது.