Advertisement

உங்கள் தலை முடி வளர்ச்சியை நீங்களே நினைத்தாலும், நிறுத்த முடியாது. இந்த 4 பொருட்களை வைத்து, வாரம் ஒரு முறை இப்படி செய்தால்!

உங்கள் தலை முடி வளர்ச்சியை நீங்களே நினைத்தாலும், நிறுத்த முடியாது. இந்த 4 பொருட்களை வைத்து, வாரம் ஒரு முறை இப்படி செய்தால்!

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வெப்பம் அதிகரித்து விட்டதாலும், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விட்டதாலும், நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை மாறி விட்டதாலும், உடல் சூடு காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து விட்டதனாலும், நம்முடைய தலை முடியானது சீக்கிரமே உதிர்ந்து விடுகிறது.

men-hair

சில பேருக்கு முடி வளர்ச்சி இல்லாமலும் இருக்கின்றது. சிலபேருக்கு தலைமுடி சீக்கிரமே நரைத்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் உங்களுடைய முடி நரைக்காமலிருக்கவும், முடி உதிர்ந்து தலையில் வழுக்கை விழாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் இயற்கையான பொருட்களை வைத்து, இப்படி வாரம் ஒரு முறை செய்தாலே போதும். முடி வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு இந்தப் பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தும் போது எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, வெந்தயம் சிறிதளவு, கருவேப்பிலை இவை நான்குமே தலைமுடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடிய சிறந்த பொருட்கள். 4 செம்பருத்திப் பூ, வெந்தயம் 2 ஸ்பூன், கருவேப்பிலை 5 கொத்து, செம்பருத்தி இலை 4, இந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். அளவு என்பது அவரவர் இஷ்டம்தான். எப்படி சேர்த்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை. வெந்தயத்தை மட்டும் முந்தைய நாள் இரவே ஊற வைத்துவிடுங்கள். இந்த இலைகளையும், பூவையும் காயவைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பச்சையாக இருக்கும்போதே பயன்படுத்தலாம்.

sembaruthi 2

இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மைய விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்த விழுதை உங்களது தலை முடியிலும், மண்டை ஓட்டிலும் படும்படி நன்றாகத் தடவ வேண்டும். முடிகளை பிரித்து விட்டு, முடிகளின் வேர் பகுதியில் இந்த விருது பட வேண்டும்.

முடிக்கும் மேலேயே தடவிவிட்டால், எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தலை பகுதியில் முழுவதும் இந்த கலவையை தடவி விட்டு, அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.

combing-hair

அதன் பின்பு நீங்கள் வழக்கம்போல் எப்படி தலைக்கு குளிப்பீங்களோ, அப்படி குளித்து விட்டால் போதும். அவ்வளவுதான். இதை நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய உடனேயே உங்களது தலைமுடியானது எப்படி பளபளப்பாக மாறுகின்றது என்பதை உங்களாலேயே காணமுடியும். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதுமானது. இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வரும் பட்சத்தில் உங்களது முடி, நரை முடியாக மாறாது. சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் முடி கொட்ட ஆரம்பித்து விடும். சிறு வயதிலிருந்தே இந்த விழுதை பயன்படுத்தி வந்தால், பிரசவத்திற்கு பின் கூட பெண்களுக்கு முடி கொட்டாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.