Advertisement

உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள்! இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள்! இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Mooligai chedi

நம்முடைய வீடுகளில் அழகுக்காகவும், அதிர்ஷ்டத்தையும்  பல செடி கொடிகளை வளர்த்து வந்தாலும், நம்முடைய ஆரோக்கியத்திற்கென்று சில செடிகளை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நம்முடைய மண்ணில் வளரக்கூடிய மூலிகைச்செடி ஏராளம். அதில் குறிப்பிட்ட இந்த 5 மூலிகை செடிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்களால் முடிந்தால் இந்த செடிகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து பலன் அடைந்தாலும் அதில் நன்மைகள் ஏராளம்.

Mooligai chedi

திருநீற்று பச்சிலை:

மருத்துவ குணம் அதிகமாக அடங்கி இருக்கும் இந்த திருநீற்றுப் பச்சிலை செடியை நம் வீட்டில் வளர்த்து வந்தால் மிகவும் நல்லது. சாதாரண காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்தால், இந்த இலையில் இருந்து நான்கு இலையை பறித்து, மென்று சாப்பிட்டாலே போதும். காய்ச்சலும் இருமலும் ஓடி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வல்லாரைக் கீரை:

சிறிதளவு வல்லாரைக்கீரை கொடியை பறித்து, உங்களது வீட்டு மண்ணில் புதைத்து வைத்தாலே போதும். சுலபமாக வளரக்கூடிய கீரை வகைகளில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகமாக கொடுக்கும் மூலிகை கீரை என்றும் சொல்லலாம். வீட்டில் இருக்கும் இந்த கீரையை பறித்து, வாரத்தில் இரண்டு முறை குழந்தைகளுக்குச் சமைத்துக் கொடுப்பதன்மூலம் அவர்களுடைய ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆடாதோடை:

Mooligai chedi

இந்த செடியானது வீட்டில் சுலபமாக வளர்ந்துவிடும். ஒரே ஒரு குச்சியை நட்டு வைத்தாலும் அதில் துளிர் விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வருபவர்கள், இந்த ஆடாதொடை இலையை நீரில் போட்டு காய்ச்சி, குடித்து வந்தாலே போதும். நெஞ்சு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். இந்தச் செடியின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.


நித்தியகல்யாணி பூச்செடி:

Mooligai chedi

இந்தச் செடியை நம் வீட்டில் வைத்து வளர்த்தால், இதில் பூக்கும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் இந்த செடி இருக்கும் இடத்தில் வீசப்படும் காற்றானது சுத்தமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செடியின் இலைகள் சர்க்கரை நோய்க்கும், புற்று நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பிரண்டை:

Mooligai chedi

இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பட்சத்தில், வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக சமையலில் சேர்த்துக் கொள்வோம். பிரண்டையை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது நமக்கு கால்சியம் சத்து அதிகரிக்கிறது. இதனால் மூட்டு வலியை தவிர்த்துக் கொள்ள முடியும். உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் அதிகப்படியான கால்சியம் சத்து கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.