Advertisement

மாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்

மாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்

எந்த ஒரு உயிரும் ஒரு உடலைக் கொண்டு இந்த உலகில் பிறப்பதற்கு அதன் தாய் மட்டுமே காரணமாக இருக்க முடியும். அதிலும் மனிதர்களாகிய நாம் பெண்களுக்கே உரிய தாய்மை பாக்கியத்தை ஒரு இறைவனின் வரமாக போற்றுகிறோம். பெண்களுக்கு தாய்மை பேறு கிட்ட அவர்கள் பதின் வயதுகளில் பூப்பெய்தி, அவர்களின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாக தொடங்கும். ஒவ்வொரு மாதமும் 3 நாட்களுக்கு கருவுறாத கருமுட்டைகள் நிறைந்த ரத்தம் பெண்களுக்கு கருப்பையிலிருந்து வெளியேறும். இதற்கு தமிழில் மாத விடாய் என பெயர்.

Period pain

இப்படி ஒவ்வொரு மாதமும் இந்த மாதவிடாய் சங்கடத்தை பெண்களாக பிறந்த ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட வயது வரை அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. இத்தகைய காலங்களில் சில பெண்களுக்கு இந்த கருப்பை ரத்தம் அதிக அளவில் வெளியேறி, அந்த பெண்களை உடல் மனசோர்வுக்கு உள்ளாக்கும். இந்த வகையான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான மருத்துவ குறிப்புக்கள் இங்கு கூற பட்டுள்ளன.

கொத்தமல்லி

பல மருத்துவ குணங்களை கொண்டது கொத்தமல்லி. அந்த கொத்தமல்லியை கஷாயம் வைத்து குடித்தாலும், வேறு பல வகைகளில் பக்குவம் செய்து உண்பதாலும் மாதவிடாய் கால ரத்த போக்கும் குறையும்.

கோதுமை

உடலுக்கு வலு கொடுப்பதும், பல அத்தியாவசிய சத்துகளை கொண்ட தானியம் கோதுமையாகும். மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகம் உள்ள காலங்களில் கோதுமை மாவை கஞ்சி வைத்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

wheat

கஞ்சி மற்றும் பசுமோர்

அதிக ரத்தப்போக்கை குறைப்பதற்கு மற்றுமொரு சிறந்த நிவாரணம் சாதம் வடித்த கஞ்சி. கஞ்சியில், அதற்கு சரிபாதி அளவில் பசுமோரை கலந்து கலக்கி குடிக்க ரத்த போக்கு சீராகும்.

Buttermilk

மாங்கொட்டை பருப்பு பொடி

மாங்கொட்டை உள்ளிருக்கும் பருப்பை வெயிலில் காய வைத்து, தூளாக்கி தேனில் குழைத்து தினமும் காலையிலும் மாலையிலும் உண்டு,வெந்நீர் குடித்து வர சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Mango

நாவல் பழ கொட்டை மற்றும் பட்டை பொடி

மருத்துவ குணங்கள் அதிகமுள்ள பழங்களில் நாவல் பழமும் ஒன்று. அப்படிப்பட்ட நாவல் பழ கொட்டைகளையோ அல்லது அந்த நாவல் மரத்தின் பட்டைகளையோ வெயிலில் காயவைத்து உலர்த்தி, அரைத்து தூளாக்கி, தேனில் குழைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ரத்த போக்கு கட்டுப்படும்.