Advertisement

விஷ பூச்சிக்கடிகளுக்கான மருத்துவ குறிப்புக்கள்

விஷ பூச்சிக்கடிகளுக்கான மருத்துவ குறிப்புக்கள்

நாம் வாழும் இதே உலகில் இயற்கையின் படைப்பான பல வகையான விலங்குகளும் மற்றும் பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் சில உயிரினங்கள் மனிதர்களை அண்டி வாழ்ந்து, அவர்களுக்கு பல வகையில் உதவுகின்றன. ஆனால் பெரும்பாலான விலங்குகள் மனிதர்களுக்கு அருகாமையில் வாழ்ந்தாலும், அவை மனிதர்களை சார்ந்து இருப்பதில்லை. இவற்றில் சில உயிரினங்கள் சமயங்களில் மனிதனுக்கு தீங்கையும் விளைவிக்கின்றன.

Poochi Kadi

அப்படிப்பட்ட உயிரினங்கள் தேனீக்கள், பூரான்கள், தேள்கள் போன்ற நச்சு தன்மை கொண்ட பூச்சிகள் ஆகும். பொதுவாக இத்தகைய பூச்சிகள் தாமாக தேடி வந்து மனிதர்களை கொட்டுவதில்லை என்றாலும் இப்பூச்சிகள் கூடுகளை கலைக்கும் போதோ அல்லது அவற்றை சீண்டும் போதோ அப்பூச்சிகள் தன்னை தற்காத்துக்கொள்ள கொட்டிவிடுகின்றன. இப்பூச்சிகள் கொட்டுகள் மற்றும் கடிகள் மூலம் நம் உடலில் பரவும் விஷத்தால் தாங்க முடியாத வலியையும், இன்ன பிற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இங்கு அந்த பூச்சிக்கடிகளுக்கான அவசர கால மருத்துவ குறிப்புகளை காண்போம்.

குறிப்பு 1 

பொதுவாக எப்படிப்பட்ட பூச்சி கடிகளின் விஷத்தையும் நீக்க குப்பைமேனி செடிகள் இலைகளின் சாற்றை பிழிந்து கடிபட்ட இடத்தில் தடவ வலி மற்றும் கடுகடுப்பு குறையும் விஷமும் நீங்கும்

குறிப்பு 2 

தேனீக்கள் கொட்டினாள் அந்த இடத்தை உண்டானடியாக தேய்த்து விடக்கூடாது. தேனீ கொட்டிய இடத்தில் வெங்காயத்தை வெட்டி சூடு பறக்க தேய்த்தால் குணம் கிடைக்கும்.

Poochi Kadi

குறிப்பு 3 

தேள், நட்டுவாய்க்காலி போன்றவை கொட்டினால், கொப்பரை தேங்காயை நன்றாக மென்று தின்றால் விஷம் உடலிலிருந்து நீங்கும்.

குறிப்பு 4 

பலவகை வண்டுகளின் கொட்டோ அல்லது கடியோ பட்டால், பப்பாளி மரத்தின் இலையை சாறு பிழிந்து, கொட்டப்பட்ட இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வர குணம் கிடைக்கும்.

Poochi Kadi

குறிப்பு 5 

கரிசலாங்கண்ணியின் இலைகளை சாறெடுத்து, அதில் பெருங்காயத்தை இழைத்து, பூச்சி கடிபட்ட இடத்தில் பற்று போட விஷம் நீங்கும்.