அவசரமாக வெளியே போக வேண்டும். முகம் பளபளப்பாக மாற வேண்டும். என்ன செய்வது? உங்க வீட்ல இருக்க இந்தப் பொருளை வெச்சு, ஒருமுறை இப்படி செஞ்சுதான் பாருங்களேன்!
முகம் பளிச்சென்று இல்லை. உடனடியாக பளபளப்பான முகத்தைப் பெற வேண்டும். அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது? உங்களுடைய முகத்தை உங்கள் வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருட்களை வைத்து, இரண்டே நிமிடத்தில், பேக் தயாரித்து, 15 நிமிடத்தில் அழகாக மாறிவிடலாம். எந்த பொருட்களை பயன்படுத்தி, உடனடியாக முகத்தை அழகாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பேக்கை இரண்டு வகையாக போடலாம். இதில் முதலாவதாக உங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு, கொஞ்சம் தண்ணீர் விட்டு, இவை மூன்றையும் நன்றாக கலக்கி கொள்ளவும். அதன் பின்பு உங்களது முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். உடனடியாக முகம் பொலிவு பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த அரிசி மாவை வைத்து இன்னொரு முறையிலும் முகத்தில் பேக் போட்டுக் கொள்ளலாம். அது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவில், இரண்டு டேபிள் ஸ்பூன் கட்டித் தயிரை விட்டு, நன்றாக கலக்கி முகத்தில் பேக் போட்டுக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டால் முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
முகத்தை உடனடியாக இயற்கையான பொருட்களை வைத்தே அழகாக மாற்ற இந்த இரண்டு வழியும் மிகவும் சுலபமானது. செலவு இல்லாததும் கூட. ஒருமுறை இதைப் முயற்சி செய்து பாருங்கள் போதும். பார்லருக்கு போக வேண்டும் என்ற அவசியமே இருக்காது என்பதை மறந்துவிடாதீர்கள். எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஃபேஸ் பேக் இது.
அரிசி மாவை கடையிலிருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியையே கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, சிறிதுநேரம் உலர்த்திய பின்பு, மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுத்தமான அரிசிமாவு கிடைத்துவிடும். பதினைந்து நிமிடத்திற்கும் மேல் முகத்தில் இந்த பேக்கை போட கூடாது. அதிகமாக உளர்வடைந்து விட்டால், முகம் லேசாக சுருக்கம் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 15 நிமிடங்கள் போடுவதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.