இதயம் பலம் பெற குறிப்புகள்
ஒரு மனிதனுக்கு உயிர் வாழ அவனது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது இதயம் என்கிற உறுப்பு. இன்று பல மக்களுக்கும் தங்களின் இளம் வயதிலேயே இதயம் பாதிப்பிற்குள்ளாகி, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த இதய பாதிப்பு ஏற்படுவதற்குண்டான காரணங்கள் மற்றும் அந்த இதயம் பலம் பெறுவதற்குண்டான மருத்துவ குறிப்பை தெரிந்து கொள்வோம்.
இதயம் பாதிப்படைவதற்கான காரணங்கள்
இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு. இது ரத்தத்தில் அதிகமாகி இதயங்களுக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை குறைத்து, விடுவதால் இருதய பாதிப்பு உண்டாகிறது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், அதற்கேற்ற உடலுழைப்பில்லாமல் இருத்தல், மன அழுத்தம் ஆகியவை இதயம் பாதிப்படைய முக்கிய காரணங்கள் ஆகும்.
இதயம் பாதிப்படைந்ததற்கான அறிகுறிகள்
சுவாசிக்கும் மூச்சு சீரற்ற தன்மையில் இருக்கும்.
உடல் பலமிழந்து போல் ஒரு உணர்விற்கும்.
சிறிது கடினமான பணிகளை செய்தாலே மூச்சு திணறல் ஏற்படுவது போன்ற ஒரு நிலை ஏற்படும்.
இதயம் பலம் பெறுவதற்கான மருத்துவ குறிப்புகள்
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ண வேண்டும்.
இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.
பசும் பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து காய்ச்சிய பசும்பாலில் அக்கஷாயத்தை கலந்து குடிக்க வேண்டும்.
மாதுளம் பழ சாற்றில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.