Advertisement

கருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

கருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் செயற்கையான உணவுகளை விடுத்து, உடல் நலத்தை மேம்படுத்துகின்ற பாரம்பரியமான உணவுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டிலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஏராளமான உணவுப் பொருட்கள் காலமாற்றத்தில் மறைந்து போய் உள்ளன. ஆனால் தற்போது அவை ஆர்வம் உள்ள மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் கருப்பட்டி ஆகும். இந்த கருப்பட்டி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

karupatti

கருப்பட்டி நன்மைகள்

கால்சியம் சத்து 

கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்

பருவ வயது பெண்கள் 

பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பருவம் பூப்படையும் காலமாகும். இக்காலத்தில் பெண்களின் கருப்பை பலம் பெறும் வகையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து சாப்பிடக் கொடுத்து வருவதால் அவர்களின் கருப்பை வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

karupatti

நீரிழிவு 

இன்று பெரும்பாலானவர்களை பாதித்திருக்கும் ஒரு நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் வந்தவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதை தவிர்த்து, கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயும் கட்டுப்பட்டு,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்கும்.

எலும்புகள் 

நமது உடலில் அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகளாகும். வயது ஏற ஏற எலும்புகள் வலிமை குறைவதை தடுக்க முடியாது. கருப்பட்டி கால்சியம் மற்றும் தாது சத்துகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

karupatti

பசியின்மை 

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவருக்கு நன்கு பசி எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளால் பசியின்மை ஏற்படுகிறது. சீரகத்தை நன்கு வறுத்து, சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும். உணவை எளிதில் செரிமானம் செய்யவும் உதவும்.

உடல் தூய்மை 

நாம் சாப்பிடும் உணவு வகைகளிலிருந்து அருந்தும் குடிநீர் வரை அனைத்திலும் சிறிய அளவில் மாசுகள் நிறைந்திருக்கவே செய்கின்றன. இந்த மாசுகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. சிறிதளவு கருப்பட்டியில், சிறிது சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருந்த நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் தூய்மை அடையும்.

karupatti

வாயு தொல்லை 

உடலில் இருக்கும் வாதம் தன்மை அதிகரிப்பதாலும், வாயுத் தன்மை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் உடலில் வாயு அதிகரித்து, தசைப்பிடிப்பு மற்றும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கருப்பட்டியுடன் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் நீங்கும்.

தாய்ப்பால் சுரப்பு 

குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ஒரு சில புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைகிறது. இப்படியான பெண்கள் சுக்கு, மிளகு பொடியை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இந்த கருப்பட்டியில் இருக்கும் சத்துகள் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கும் சென்று சேரும்.

karupatti

சளி தொல்லை 

குளிர்காலங்களிலும், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போதும் ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கில் நீர் வடிதல் மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு, நம்மை மிகவும் அவதிக்குள்ளாக்குகிறது. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளி தொல்லை முற்றிலும் நீங்கும்.

தோல் பளபளப்பு 

நமது உடலை போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது. கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.