Advertisement

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

பழங்காலம் முதல் இன்று வரை தேனிற்கு இருக்கும் மௌசு சிறிதும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விருந்து, மருந்து என இரண்டிலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்காலத்தை போல அல்லாமல் இன்று செயற்கை முறையில் வளர்ப்பு தேனீக்கள் மூலம் தேனை எடுத்து பலர் மார்க்கெட்டில் விற்கின்றனர். சூப்பர் மார்கெட்டிற்கு சென்றால் அங்கு தேன் பாட்டில்கள் பளபளக்கின்றன. அதை கண்டு நாமும் அதை வாங்கி உண்கின்றோன் ஆனால் இந்த வர்த்தக சூழலில் தேனில் கலப்படம் என்பது நிச்சயம் இருக்க தான் செய்கிறது.

suthamana pure honey

தேனில் உள்ள மருத்துவ குணங்களை உணர்ந்து பலர் தேனை வாங்குகின்றனர். ஆனால் சிலர் வணிக நோக்கத்திற்காக தேனில் வெள்ளை சக்கரை போன்றவற்றை கலந்து அதன் மகத்துவதையே பாழாக்கு கின்றனர். இந்த நிலையில் நாம் வாங்கும் தேன் சுத்தமானதா என்பதை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

சோதனை முறை 1:

ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால் அந்த தேன் கரையாமல் அப்படியே பாத்திரத்தின் கீழ் சென்றால் அது நல்ல தேன். இதற்கு மாறாக தண்ணீரில் தேன் கரைந்து போனால் அது சுத்தமான தேன் கிடையாது என்பதை அறிந்துகொள்ளலாம்.

Pure honey

சோதனை முறை 2:

பொதுவாக தேனிற்கு அடர்த்தி மிகவும் அதிகம் ஆகையால் தேனை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கொண்டு அதை ஒரு கிண்ணத்தில் விட்டால் சுத்தமான தேன் நூல் போல ஒழுகும். இதற்கு மாறாக கலப்படமான தேன் சொட்டு சொட்டாக விழும்.

pure honey

சோதனை முறை 3:

மை உறிஞ்சும் ஒரு காகிதத்தில் ஒரு சொட்டு தேனை ஊற்றுகையில் அந்த தேன் ஊறி கீழே இறங்கினால் அது கலப்படமான தேன். மாறாக தேன் ஊறாமல் அப்டியே இருந்தால் அது சுத்தமான தேன்.

Pure honey

சோதனை முறை 4:

சிறிதளவு தேனை ஒரு வாணலில் ஊற்றிக்கொண்டு சில நிமிடம் சூடு செய்தால் அதன் அடர்த்தி குறைய துவங்கும். பின்பு சூடு செய்வதை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் சுத்தமான தேன் மீண்டும் பழைய அடர்த்தி நிலைக்கு திரும்பும். கலப்படமான தேன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது.

Pure honey

சோதனை முறை 5:

மணலில் இரண்டு சொட்டு தேனை விட்டு ஒரு நிமிடம் கழித்து ஊத வேண்டும். அப்படி ஊதுகையில் தேன் உருண்டோடினால் அது சுத்தமான தேன். மாறாக தேன் மணலில் ஊறி இருந்தால் அது கலப்படமுள்ள தேன்.