கற்பூரவள்ளி பயன்கள்
நமது இந்திய நாட்டில் விளைகின்ற மருத்துவ மூலிகை வகைகள் அளவிற்கு உலகின் மற்ற நாடுகளில் விளைகின்ற மருத்துவ மூலிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது ஆகும். இதில் பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி இருக்கிறது. இக்கற்பூரவள்ளி செடியின் மேலும் பல மகத்துவங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கற்பூரவள்ளி பயன்கள்
சுவாச பிரச்சனைகள்
மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
தோல்
நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்ட்டிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு மேற்கூறப்பட்ட வழிமுறையை பின்பற்றலாம்.
ஆஸ்டியோபொராஸிஸ்
ஆஸ்டியோபொராஸிஸ் என்பது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
புற்று நோய்
உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் ஏற்படுகிறது. புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. இதில் தற்போது உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் புற்று நோய்களாக மார்பக புற்று நோய் மற்றும் பிரஸ்ட்ரேட் புற்று நோயும் இருக்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா – 6 வேதிப்பொருட்கள் இந்த வகையான புற்று நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக புற்று நோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படபடப்பு
ஒரு சிலர் அவ்வப்போது தேவையற்ற விடயங்களுக்கு எல்லாம் பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.
சிறுநீரகங்கள்
நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
ஜுரம்
சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும், நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும், ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
ஆஸ்துமா
சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் நிலையில் வருபவர்களுக்கு ஆஸ்துமா னாய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.
புகைபிடித்தல்
புகை பிடித்தல் என்பதும் ஒரு வகை போதை பழக்கம் ஆகும். இந்த புகைப்பிடிப்பதால் நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து சுவாசிக்கும் போது சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் நுரையீரல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி, அதில் பாடியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். நுரையீரல் சம்பந்தமான புற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.
அஜீரணம்
சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.