வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இதோ
தினந்தோறும் நமது மதிய மற்றும் இரவு உணவுகளில் காய்கள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. காய்கள் பெரும்பாலானவை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. அப்படியான காய்களில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது. இந்த வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழைக்காய் பயன்கள்
சர்க்கரை வியாதி
வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
புற்று நோய்
புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதியாகும். அதிலும் வயிற்றில் வருகிற பெருங்குடல் புற்று ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரக்கூடிய ஒரு புற்று ஆகும்.வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் சாப்பிட வேண்டும்.
எலும்புகள்
நமது உடலுக்கு ஆதாரமாக இருப்பது எலும்புகள் ஆகும். எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பது அவசியம். வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
அதீத உணர்ச்சிகள்
ஒரு சிலர் சிறு விடயங்களுக்கு கூட அதீத உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வாழைக்காய் சிறந்த உணவாக இருக்கிறது. வாழைக்காயில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை ஒழுங்குபடுத்தி உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியை தருகிறது.
உடல் எடை குறைக்க
இன்று பலருக்கும் இருக்கும் தலையாய பிரச்சனை அதீத உடல் எடை. உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடுவதை வடிக்கையாக்கி கொள்ள வேண்டும். வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
மலச்சிக்கல்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் மலம் கழிப்பது ஒரு ஆரோக்கிய அறிகுறியாகும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது..
அதீத பசி
வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். இப்படிப்பட்டவர்கள் வாரம் இருமுறை சற்று பழுத்த நிலையில் இருக்கும் வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் உடல் அதிகம் பருமன் ஆவதை தடுக்க முடியும். அதிக அளவில் எடுக்கும் பசி உணர்வை கட்டுப்படுத்தி, குறைவாக உணவை உட்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும்.
இதயம்
வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வாழைகாய்களை அதிகம் சாப்பிடலாம்.
கண்கள்
முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். வாழைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.
சுறுசுறுப்பு
வாழைக்காய் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அடிக்கடி வாழைப்பழம் சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதில் வாழைப்பழம் உதவுகிறது.