Advertisement

உடலின் பல நோய்களை பலாப்பழம் எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

உடலின் பல நோய்களை பலாப்பழம் எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

மற்ற எந்த வகையான இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பெரும்பாலான பழங்கள் கொண்டிருக்கும் இனிப்பு சுவை ஒரு காரணமாக இருந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்களை தரும் ஒரு எளிமையான உணவாகவும் இருப்பது ஒரு காரணம். நமது பழந்தமிழர்கள் தெய்வீக பழங்களாக கருதிய முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை ஆகும். இதில் தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட சுவையான “பலாப்பழம்” சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

palapalam 1

பலாப்பழம் நன்மைகள்

கண்பார்வை 

பலாப்பழத்தில் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

தைராய்டு பிரச்சனைகள் 

தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை அது அதிகம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.

ஊட்டச்சத்து 

பலாப்பழம் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். உடலின் கடுமையான உழைப்பால் இழந்த சத்துகளை பலாப்பழம் அல்லது பலாப்பழம் கொண்டு செய்யப்பட்ட பானகங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம்.

குடல் புற்று 

புற்று நோய்களில் பல வகைகள் இருக்கிறது. இதில் மனிதர்களின் குடலில் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது ஆகும். மேலை நாடுகளில் பலர் இறக்க காரணமாக இந்த குடல் புற்று நோய் இருக்கிறது. பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.

palapalam 5

ரத்தசோகை 

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

சரும நலம் 

பலாப்பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். இதை தொடர்ந்து 6 வாரங்களுக்கு மேல் செய்து வந்தால் சிறப்பான பலன் உண்டு.

palapalam 4

வயிறு நலம், செரிமான சக்தி 

பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் பலாப்பழம் பேருதவி புரிகிறது.

எலும்புகள் 

உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும். பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

palapalam 3

ரத்த அழுத்தம் 

30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும். பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

தலைமுடி 

ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.