Advertisement

வைட்டமின் சி சத்துகள் அதிகம் உட்கொள்வதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

வைட்டமின் சி சத்துகள் அதிகம் உட்கொள்வதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

சத்து மிகுந்த உணவுகளை கீழை நாட்டினர் முறையாக தரம் பிரித்தாலும், அந்த சத்துக்கள் என்னென்ன என்பதை மேலை நாட்டினரே கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தினார். நாம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான சத்துகள் இருக்கின்றன. அதில் வைட்டமின் சத்து மிக முக்கியமானதாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பல வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான சத்தாக வைட்டமின் சி சத்து இருக்கிறது. இதை அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைப்பார்கள். வைட்டமின் சி சத்து நாம் சாப்பிடும் பல காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்றவற்றை நிறைந்திருக்கின்றன. அப்படி சாப்பிடப்படும் வைட்டமின் சி சத்தால் நமக்கு நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vitaminc

வைட்டமின் சி பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி 

வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த ஒரு சத்தாகும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை வலுவூட்டி, சுலபத்தில் நமது உடலை தொற்றுநோய்கள்அணுகா வண்ணம் காவல் காக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து உடலின் செல்களில் தொற்று நோய் கிருமிகள் பரவாமல் தடுத்து, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது.

ரத்த அழுத்தம் 

உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பிராண வாயு மற்றும் சத்துக்கள் சென்றடைவதை நமது உடலில் ஓடும் ரத்தம் உறுதி செய்கிறது. வைட்டமின் சி சத்துகள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வைட்டமின் சி சத்துகளை அதிகம் உட்கொண்ட நபர்களுக்கு ரத்த அழுத்தம் சரிசமமான அளவில் இருந்ததை ஆய்வுகளில் உறுதி செய்திருக்கின்றனர். எனவே ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமால் தடுக்க நினைப்பவர்கள் வைட்டமின் சி சத்துகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதய நோய்கள் 

இயற்கையான உணவு வகைகளில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறைகிறது. ஆராய்ச்சிகளின் படி வைட்டமின் சி சத்துகளை தினசரி உணவுகளிலிருந்து அல்லது தனி ஊட்டச்சத்தாக எடுத்துக் கொண்டவர்களுக்கு 25% இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்ததை உறுதிப் படுத்தி இருக்கின்றனர். வைட்டமின் சி சத்து கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

யூரிக் அமிலம் 

நமது உடலில் இருந்து சிறுநீர் வழியாக பலவிதமான நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் வெளியேறுகின்றன. அதில் ஒன்று யூரிக் அமிலம். வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உட்கொண்டவர்களுக்கு சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு வெகுவாக குறைந்து, எதிர்காலத்தில் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆர்த்தரைடீஸ்

ஆர்த்தரைடீஸ் என்பது உடலில் மூட்டு பகுதிகளான முழங்கை, முழங்கால் மற்றும் இதர எலும்பு மூட்டுகளில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வயதானவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உருவாகி, அவை இந்த மூட்டுப் பகுதிகளில் படிந்து விடுவதால் மேற்கண்ட ஆர்த்தரைடீஸ் பிரச்சினை ஏற்படுகிறது. வைட்டமின் சி சத்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் யூரிக் அமிலங்கள் குறைந்து, ஆர்த்தரைடீஸ் நோய் பாதிப்பு நீங்கி, மூட்டுக்களில் வலி ஏற்படுவது குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரும்புச்சத்து 

மனிதர்களின் உடலில் இன்றியமையாததாக இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாய்வதற்கும், சிவப்பு இரத்த அணுக்கள் பெருக்கத்திற்கும் இரும்புச்சத்து அவசியம். வைட்டமின் சி சத்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, உணவுகளிலிருந்து இரும்புச்சத்து அதிக அளவில் ரத்தத்தில் சேர உதவுகிறது. ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி சத்துகளை உட்கொண்டால் உண்ணும் உணவுகளில் இருந்து 67 சதவீத இரும்புச்சத்தை பெற்று பூர்த்தி செய்ய முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

vitamin c 4

வெள்ளை ரத்த அணுக்கள் 

மனிதர்களின் ரத்தத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் சரிசமமான அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்கும். வைட்டமின் சி சத்துக்கள் சரியான அளவில் சாப்பிடுபவர்களுக்கு உடலில் உள்ள இரத்த அணுக்கள் மற்றும் லிம்போசைட் அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறத. நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் சி சத்தை அதிகம் உட்கொண்ட பிறகு வெகு சீக்கிரத்தில் அந்நோயிலிருந்து விடுபட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

டிமென்சியா 

சிந்திக்கும் திறன் குறைபாடு மற்றும் அதீத ஞாபக மறதி ஆகியவற்றை கொண்டவர்கள் டிமென்சியா எனப்படும் நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் என மருத்துவ உலகம் கூறுகிறது. வைட்டமின் சி சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது என்பது நாம் ஏற்கனவே அறிந்தது தான். வைட்டமின் சி சத்துகளை மேற்கூறிய குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்த பிறகு, அவர்களின் சிந்திக்கும் திறனில் முன்னேற்றம் மற்றும் ஞாபகத் திறன் மேம்பட்டதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

vitamin c

ஸ்கர்வி 

உடலில் எலும்புகள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் போன்றவை மிகவும் வலுவிழந்து விடுவதை ஸ்கர்வி நோய் என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். குறிப்பாக இந்த நோய் வளரும் குழந்தைகளையே அதிகம் தாக்குகின்றன. இந்த நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணம் உடலில் வைட்டமின் சி சத்து குறைபாடே ஆகும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுப்பதன் மூலம் இந்த ஸ்கர்வி நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

கண் புரை 

அதிக புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதாலும், முதுமை மற்றும் இன்னபிற காரணங்களாலும் பலருக்கு கண்புரை நோய் ஏற்படுகிறது. இந்த கண்புரை நோய் ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக உடலில் வைட்டமின் சி சத்து குறைபாடே என மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்கவும் கண்புரை மற்றும் இதர கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் தினந்தோறும் வைட்டமின் சி சத்து இருக்கின்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.