அல்சர் குணமடைய பாட்டி வைத்தியம்
ஒருகாலத்தில் யாரோ ஒருவருக்கு இருந்து வந்த அல்சர் இப்போது பெரும்பாலான இளஞ்சர்களுக்கு இருக்கிறது. தலைவலி, ஜுரம் போல வெகு சாதாரணமாக இந்த நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே. பாக்கெட் உணவுகள், ரசாயனம் கலந்துள்ள உணவுகள் என மேற்கத்திய உணவு பழக்கங்களை கடைபிடிப்பதாலேயே இது போன்ற நோய்கள் வருகின்றன.
தொண்டை, உணவுக்குழாய், சிறுகுடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் புண்களை அல்சர் என்கிறோம். நாம் சரியான நேரத்திற்கு உண்ணவை உண்ணவில்லை என்றாலும், காலை வேலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தாலும், காரம் அதிகம் உள்ள உணவுகள், மாசாலா அதிகம் உள்ள உணவுகள், புளிப்பான உணவுகள் போன்றவற்றை அதிகம் உண்பதாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.
அடிக்கடி புளியேப்பம் வருவது, நெஞ்செரிச்சல் வருவது, நள்ளிரவு நேரங்களில் வயிறு வலிப்பது, உணவு உண்ட பிறகு வயிறு வலிப்பது போன்றவை அல்சர் நோயின் அறிகுறிகள் ஆகும். அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வர அல்சர் குணமடையும்.
குறிப்பு 2 :
வெள்ளை குங்கிலியம்(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நான்கு கொதிக்க விட வேண்டும். இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை தூய பசு வெண்ணெயில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் பாலை குடித்து வர அல்சர் குணமாகும்.
குறிப்பு 3 :
இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர அல்சர் குணமடையும்.
குறிப்பு 4 :
அகத்திக்கீரையை தினமும் உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வர அல்சர் குணமடையும்.
குறிப்பு 5 :
குப்பை மேனி, கடுக்காய், கற்றாழை, கோஸ், நெல்லி, வேப்பிலை, அருகம்புல், மணத்தக்காளி, மஞ்சள், பெருங்காயம், வாழைத் தண்டு, அகத்திக்கீரை, சீரகம், மாதுளை, அருகம்புல், வெந்தியம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பொடியாக்கி, ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் வீதம் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.