Advertisement

தொப்பையை குறைக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்ன செய்யலாம்?

தொப்பையை குறைக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்ன செய்யலாம்?

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு தொப்பையினால் அதிகப்படியான பிரச்சனை வருகிறது. அதாவது ஒல்லியான உருவத்துடன் இருப்பர்களுக்கும் தொப்பை பெரியதாக இருக்கும். தோற்றத்தில் குண்டாக இருப்பவர்களுக்கு கூட தொப்பை தனியாக தெரியாது. ஒல்லியான தேகத்தை கொண்டவர்களுக்கு தொப்பை ஒரு பெரிய பிரச்சனை தான். அழகிற்காக மட்டும் சொல்லப்படவில்லை. தொப்பையை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை எப்படி குறைப்பது? தொப்பையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது, என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

thoppai

தொப்பை பெரிய அளவில் இருக்கின்றது என்றால் அதற்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கம் தான் காரணம். டயட் என்ற பெயரில் நாள் முழுவதும் தங்களுடைய சாப்பாட்டு முறையை கவனமாக பார்த்து வருவார்கள். ஆனால் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் அவர்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த உணவு கட்டுப்பாட்டினை, அந்த நாள் முடிவில் மொத்தமாக வீணாக்கி விடுவார்கள். மனிதர்களுக்கு ஜீரணசக்தியானது இரவு நேரங்களில் குறைந்துவிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் கடினமான சாப்பாட்டை, சாப்பிட்ட உடன் படுத்து உறங்கக் கூடாது என்று கூறுவார்கள்.

விரைவில் ஜீரணம் ஆகாத உணவினை நாம் கட்டாயம் இரவு வேளைகளில் அருந்தக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மைதான். இப்படி இருக்கும் பட்சத்தில் மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ நீங்கள் உண்ணக்கூடிய உணவு பழக்க வழக்கத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் சேர்த்து தனுராசனம் பயிற்சி தொப்பையை குறைக்க மிகவும் நல்ல வழி.

thoppai1

சிலபேருக்கு, காலை எழுந்து காலைக் கடன்களை முடித்த பின்பு வயறு சீராக இருக்கும். ஆனால் உணவு அருந்திய பின்பு தொப்பை சற்று பெருத்து இருக்கும். இப்படி இருந்தால் இது வாய்வு தொல்லையினால் வரும் பிரச்சனை. ஆகவே இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு தகுந்த உணவினை சாப்பிடுவது நல்லது. அதாவது வாயு பிரச்சனை கொடுக்கும் பொருட்களை, சமைக்கும்போது முறையாக சமைத்து, சரியான நேரத்தில் சாப்பிட்டால், அதிலிருந்து நமக்கு பிரச்சனை எதுவும் ஏற்படாது.

பருப்பு சாப்பிட்டால் சிலருக்கு வாய்வு தொல்லை ஏற்படும் என்று கூறுவார்கள். பருப்பை, பெருங்காயம் சேர்த்து முறையாக சமைத்து, பகல் நேரத்திலேயே சாப்பிட்டு விட்டால் எந்த பிரச்சனையும் வராது என்பதுதான் உண்மை. எந்தப் பொருளையும் நாம் பயன்படுத்தும் பயன்பாட்டில் தான் அதன் நன்மையை நம்மால் பெற முடியும். சத்து உள்ள பொருட்களை எல்லாம் சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று அதை ஒதுக்கி விடக்கூடாது.

perungayam

குறிப்பாக பெண்கள். ஆண்கள் உடல் அளவில் பலம் கொண்டவர்களாக உள்ளார்கள். பெண்கள் மனதளவில் பலம் கொண்டவர்கள், என்று சொல்வார்கள் அல்லவா? நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்கும். ஆனால் பெண்களுக்கும் உடல் பலம் அவசியம் தேவை என்பதை ஏன் சிந்திக்க மாட்டேங்கிறீங்க! நாள் முழுவதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்களும் தங்களது உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வீட்டு வேலை, வேலைக்கு சென்றால் அலுவலக வேலை, இந்த இரண்டையும் சமாளிப்பதற்கு, ஆண்களைவிட பெண்களுக்கு தானே வலிமை அதிகம் தேவை.

நீங்கள் பெண்களாக இருந்தால் கட்டாயம் தினம்தோறும் 2 பேரிச்சம்பழம், 2 அத்திப்பழத்தை தினம்தோறும் சாப்பிடும் பழக்கத்தை உங்கள் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு ஒரு டம்ளர் பசும்பால். குறைந்தபட்சம் இவைகளை சாப்பிட்டால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். இதற்காக ஆண்கள் சாப்பிடக்கூடாதா என்றெல்லாம் கேட்க வேண்டாம்! பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை பிரச்சனை இது போன்ற பிரச்சனைகளுக்கு உலர் பழங்கள் நல்ல மருந்தாக இருக்கும். உலர் திராட்சைப் பழங்களைக் கூட தினம்தோறும் சாப்பிடலாம்.

athipalam 3

நீங்கள் ஆண்களாக இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, இந்த பொருட்களை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. உலகமே வைரஸை கண்டு அஞ்சி ஒடுங்கி இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு வீட்டில் உள்ள வேலைகளுக்கு ஓய்வு கிடைக்கிறதா? சற்று யோசித்துப்பாருங்கள். அவர்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம் தானே!

திருமணத்திற்கு முன்பு வரை பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறையை, திருமணத்திற்கு பின்பு காட்டுவதில்லை. குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு பின்பு தான் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் திருமணத்திற்கு பின்பு குழந்தைப்பேறு, வீட்டு வேலை என்ற சுமைகளை சுமக்க அதிகப்படியான ஆற்றலும், மன வலிமையும், உடல் வலிமையும் கட்டாயம் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.

Thiyanam

இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் 5 நிமிடம் கண்களை மூடி, உங்கள் சௌகரியத்துக்கு தகுந்தவாறு அமர்ந்துகொண்டு தியானம் செய்து பழகுங்கள். அந்த ஐந்து நிமிட மன அமைதி, உங்களை அடுத்த நாள் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். ஆரோக்கியத்தோடு வாழ்வது உங்கள் கையில்தான் உள்ளது. அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டே இருந்தால், திரும்பிப் பார்ப்பதற்குள் உங்களை நீங்களே இருந்திருப்பீர்கள்.