சுக்கான் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
சித்த மருத்துவம் என்பது தமிழ் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைத்திய முறையாகும். இந்த மருத்துவ முறையில் பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவ தீர்வாக கீரை உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது. பல கீரை வகைகள் இருந்தாலும், ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு தீர்வளிக்கும் கீரைகள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுக்கான் கீரை. சுக்கான் கீரை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சுக்கான் கீரை நன்மைகள்
குடற்புண் குணமாக
நமது உடலில் மிக மிருதுவான, உணர்வுமிக்க தசைகள் கொண்டதாக குடல்கள் இருக்கின்றான. உணவு முறைகளில் ஏற்படும் மாறுபாடுகள், வயிற்றில் வாயு அதிகரித்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் ஏற்படுகின்றன. சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண்கள் வேகமாக குணமாகும்.
இதய பலவீனம்
நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து துடிக்கும். இந்த துடிப்புகளிள் மாறுபாடுகள் ஏற்படுமானால் உடலில் ஏதோ ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் தினந்தோறும் சுக்கான் கீரையை சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலமாகி, அதன் இயக்கம் சீராகும்.
பல்வலி
உணவை நன்றாக அரைத்து மென்று சாப்பிட சத்துக்கள் அதற்கு பொருட்கள் கற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒரு பற்களில் பலவிதமான பிராச்சனைகள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனையால் அவதியுறுபவர்கள் சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அப்பொடியை கொண்டு தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் வலி நீங்கி, பற்கள் மற்றும் பல் ஈறுகள் உறுதியாகும்.
மலச்சிக்கல் நீங்க
மனிதனுக்கு ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு அடிப்படையே மலச்சிக்கல் தான் என நவீன மருத்துவம் கூறுகிறது. அவசரமான இன்றைய வாழ்க்கை முறையால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்தாக இருக்கிறது. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு பக்குவத்தில் சமைத்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
பசியைத் தூண்ட
பசி உணர்வு என்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இயற்கை தந்த ஒரு அற்புதமான உணர்வாகும் ஒரு சிலருக்கு இந்த பசி உணர்வு அறவே ஏற்படாமல் போவதால், அவர்களால் சரிவர சாப்பிட முடியாமல் போகிறது. ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. இப்படிப்பட்டவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கி, அதை சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
ஈரல் பலப்பட
நமது உடலில் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் நச்சுதன்மை நீக்கி, உணவை செரிமானத்திற்கு உகந்த வகையில் செய்வது கல்லீரலின் பணியாக இருக்கிறது. மது, புகை, போதை வஸ்துக்கள் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கல்லீரல் வெகு விரைவில் பாதிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. எனவே கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து பருகி வந்தால் கல்லீரல் நன்கு பலப்படும்.
நெஞ்செரிச்லைத் தடுக்க
நாம் சாப்பிடும் உணவுகளை நன்கு செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் வயிற்றில் பல அமிலங்களின் சுரப்பு இருக்கின்றன. ஒரு சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் மற்றும் வாயு கோளாறுகளாலும் என்ன உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இப்படிப்பட்டவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து, கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் விரைவில் நீங்கும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்த
நமது உடலில் உயிர் இருப்பதற்கு முக்கிய காரணமாக உடலில் ஓடக்கூடிய இரத்தம் இருக்கிறது. இந்த இரத்தத்தில் நச்சுக்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுக்கான் கீரை இயற்கையிலேயே இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் சட்னி பதத்தில் அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும்.
தேள் கடிக்கு
உலகில் வாழும் பல வகையான நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒரு வகையாக தேள்கள் இருக்கிறது. இந்த தேள்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு அருகில் அதிகம் வாழ்கின்றன. நம்மை தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும். எனவே தேள் கடிபட்டவர்களுக்கு உடனடியாக கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. உடலில் பரவிய விஷம் விரைவில் நீங்கும்.
ஆஸ்துமா
உலகில் பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோயாக ஆஸ்துமா நோய் இருக்கிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் பல நேரங்களில் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக சுக்காங்கீரை இருக்கிறது. இந்த சுக்கான் கீரையை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கடுமை தன்மை குறைந்து சீராக சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.