Advertisement

எலுமிச்சை பழம் கொண்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

எலுமிச்சை பழம் கொண்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

நமது நாட்டில் உணவு முறைகளில் ஆறு சுவைகள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. அதில் ஒன்று புளிப்பு சுவை ஆகும். நம் நாட்டில் புளியம் பழங்கள் உணவுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சை சாறு மட்டும் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது. பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்த எலுமிச்சம் பழம் தற்போது உலகெங்கிலும் பயிரிடப்படுகிறது. அந்த எலுமிச்சம் பழத்தை மற்றும் அதன் சாற்றை அருந்துவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

elumichai

எலுமிச்சை பயன்கள்

ஷெமிக் ஸ்ட்ரோக்

ஷெமிக் எனப்படும் ஒருவகையான வாத நோய் பெண்களுக்கு அதிகம் ஏற்படுறது. அமெரிக்க இதய நல மருத்துவர் சங்கம் நடத்திய ஆய்வுகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சம் பழச்சாறு மற்றும் எலுமிச்சம் பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் காப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்று நோய்களை தடுக்க 

பழங்காலம் முதலே புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சைஅதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.

elumichai lemon

உடல் எடை குறைய 

தற்போதைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அவர்களின் வயதுக்கு மீறிய அதீத உடல் எடை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது.

பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம் 

சிட்ரிக் ஆசிட் எனப்படும் சிட்ரிக் அமிலம் நிறைந்த பழ வகைகளில் ஒன்று எலுமிச்சை. இதில் நிறைந்திருக்கும் சிட்ரிக் அமிலம் உள்ள மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள். இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

elumichai

கல்லீரல் வலுப்பெற 

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுபவர்கள், மது, சிகரெட் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு அவர்களின் கல்லீரல் அதிகமாக வேலை செய்வதோடு, அந்த உறுப்பில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து எதிர்காலங்களில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இரண்டு நாட்களுக்கொரு முறை அல்லது குறைந்த பட்சம் வாரத்திற்கொரு முறை எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை மேம்படுத்துகிறது.

எலும்புகள் வலிமை பெற 

உடல் சிறப்பாக இயங்கவும், கடுமையான வெளிப்புற அழுத்தங்களை தாங்கவும் எலும்புகளில் அதிக வலிமை தேவைப்படுகிறது. அத்தகைய எலும்புகள் வலிமையாக இருக்க நமது உணவில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எலுமிச்சை பழத்தில் இந்த அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. அடிக்கடி எலுமிச்சை பழச்சாறு அருந்துபவர்கள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

elumichai

சிறுநீரக கற்கள் கரைய 

தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் குறைந்த அளவு சிட்ரேட் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிர்காலங்களில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை காட்டிலும் அதிக வீரியம் மிக்க சிட்ரிக் அமில கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. எனவே சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நோய் ஏற்படாமல் செய்கிறது.

தலைமுடி ஆரோக்கியம் 

தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு எலுமிச்சை சாற்றை நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

elumichai

ரத்த காயங்கள் 

எலுமிச்சம் பழம் சாற்றில் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை அதிகமுள்ளது. சிறிய அளவிலான ரத்த காயங்களில் எலுமிச்சை சாற்றை சிறிது எடுத்து தடவுவதால் அக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தம் விரைவில் உறையவும் உதவுகிறது. மேலும் கோடை காலங்களிலும், இன்னபிற காரணங்களாலும் சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் எலுமிச்சைச் சாற்றில் ஒரு பஞ்சுத் துண்டு தொய்த்து, ரத்தம் வடியும் நாசி துவாரத்திற்குள்ளாக வைத்துக் கொள்வதால் ரத்தம் வடிவது உடனடியாக நிற்கும்.

தோல் வியாதிகள் 

எலுமிச்சையில் இயற்கையான கிருமிநாசினி வேதிப் பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. எனவே தோல் சம்பந்தமான நோய்கள் பிரச்சனைகளுக்கு எலுமிச்சைப்பழச் சாறு சிறந்த தீர்வாக இருக்கிறது. சொறி, படர் தாமரை, பூஞ்சை போன்றவற்றால் நமது தோலில் ஏற்படும் பாதிப்புகளின் மீது, எலுமிச்சம் பழ சாற்றை நன்கு தடவி வருவதால் மேற்சொன்ன தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்குகின்றன. மேலும் எலுமிச்சை பழச்சாறு தினமும் அருந்துபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் தன்மை காக்கப்பட்டு தோல் பளபளப்பையும், இளமையான தோற்றத்தையும் தருகிறது.