ஆலிவ் எண்ணெய் நன்மைகள்
உணவை சமைக்கும் முறை பல வகையாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் பொரித்தால் மற்றும் வறுத்தால் முறையாகும். உணவை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் எண்ணெய் மிகவும் அவசியமாக இருக்கிறது. தற்போது நாம் சமைக்க பயன்படுத்த பல எண்ணெய் வகைகள் உள்ளன. அதில் சமீப வருடங்களில் மேலை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அறிமுகமான “ஆலிவ் எண்ணெய்” ஒன்றாகும். இந்த ஆலிவ் எண்ணையில் சமைப்பதற்கு மற்றும் இன்ன பிற பயன்பாடுகளுக்கென்று ஆலிவ் எண்ணெய் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஆலிவ் எண்ணையின் பொதுவான பயன்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆலிவ் எண்ணெய் நன்மைகள்
மலச்சிக்கல்
மலச்சிக்கல் ஒரு வியாதி என்பதை விட ஒரு குறைபாடு என்று கூறுவதே சிறந்தது. ஒரு சிலர் மலச்சிக்கலை தீர்ப்பதற்கு ரசாயனங்கள் நிறைந்த மாத்திரைகள் மற்றும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவற்றை விட ஒரு சிறந்த இயற்கை மலமிளக்கி மருந்தாக ஆலிவ் எண்ணெய் இருக்கிறது. தினமும் காலையில் தூங்கியெழுந்ததும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அருந்த வேண்டும் மற்றும் இரவில் உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அருந்த வேண்டும். இந்த முறையை மலச்சிக்கல் தீரும் வரை பயன்படுத்த வேண்டும்.
காது குறும்பி
காதுகளின் துவாரத்தில் ஒரு விதமான மெழுகு சுரப்பு அனைவருக்கும் ஏற்படும். இதை தமிழில் குறும்பி என்பார்கள். காதுகளில் அடிக்கடி இந்த குறும்பியை சுத்தம் செய்து நீக்காதவர்களுக்கு காதுகளுக்குள் அரிப்பு, புண்கள் போன்றவை ஏற்படலாம். அதிகளவு குறும்பி காதில் சேர்ந்திருக்கும் போது ஆலிவ் எண்ணையின் சில துளிகளை விடுவதால் ஏற்கனவே காதுகளில் அதிகம் சேர்ந்திருக்கும் குறும்பியை சுலபத்தில் வெளியேற்றி காதுகளை பாதுகாக்கும்.
ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக் என்பது நரம்பு மண்டலம் பாதிப்பால் மயக்கம் ஏற்பட்டு பேச்சு குழறல், உடலின் ஒரு பக்கம் செயலிழப்பது போன்றவற்றை ஏற்படுத்தும் ஒரு பாதிப்பாகும். இந்த வியாதி வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைக்கப்பட்ட பதார்த்தங்களை சாப்பிட்டு வருவதால் இந்த ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்க முடியும்.
பாலியல் குறைபாடுகள்
மனிதர்களின் ஒரு இயற்கை உந்துதல் மற்றும் விருப்பமாக உடலின்பம் அனுபவிக்கும் உணர்வு இருக்கிறது. இன்றைய காலத்தில் இருக்கும் மன அழுத்தமிக்க வாழ்க்கை காரணமாக ஆண் பெண் ஆகிய இருவருக்கும் பாலியல் ரீதியான உடல் குறைபாடுகள் ஏற்படுகின்றன. உண்ணும் உணவுகளில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி வருவதால் இரு பாலருக்கும் பாலியல் ரீதியான குறைபாடுகள் சுலபத்தில் நீங்கும்.
வலி நிவாரணி
ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. உடலில் ஏற்படும் வெளிக்காயம் அல்லது உள்காயம் ஆகியவற்றால் மிகுந்த வலி அனுபவிக்கும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. ஆலிவ் எண்ணையில் அதிகம் இருக்கும் ஆலியோகேந்தல் எனப்படும் வேதிப்பொருள் உடலில் காயங்களால் ஏற்படும் அதீத வலியை உடனடியாக குறைக்கிறது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்களை கரைப்பதில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி அடுப்பில் கொதிக்க வைத்து, பிறகு இறக்கி அந்நீரில் 2 அவுன்ஸ் எலுமிச்சை சாறு, 2 அவுன்ஸ் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அக்கலவை நீரின் சூடு தணிந்தவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து காலை வேளைகளில் சிறிதளவு குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்து விடும்.
மன அழுத்தம்
நாம் நம்முடைய பிரச்சனைகளை அவ்வப்போது தீர்த்து கொள்ளாமல், தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை மனதில் வளர்த்து கொண்டு இறுதியில் மன அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறோம். உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆசுவாசபடுத்தி நமது மன அழுத்தங்கள் முற்றிலும் நீங்குகிறது.
பாத வெடிப்பு
உடலில் பித்தம் அதிகரிப்பதாலும், பாதத்தில் நுண்கிருமிகள் பாதிப்புகளாலும் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டு நடக்கும் போது வலி மற்றும் எரிச்சலை சிலருக்கு ஏற்படுத்துகிறது. சுடுநீரில் எலுமிச்சம் சாற்றை பிழிந்து,கலக்கி அந்நீரில் சிறிது பாதத்தை வைத்திருந்து பிறகு பாதவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆலிவ் எண்ணையை தடவி வந்தால் பாத வெடிப்பு கூடிய சீக்கிரம் குணமாகும்.
தோல் வியாதிகள்
நமது சருமம் எனப்படும் மேற்புற தோலில் ஈரப்பதம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஈரப்பதம் குறைவதாலும் சில வகையான நுண்ணுயிர்கள் தொற்றுகளாலும் சிலருக்கு தோலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. தோல் பளபளப்பை மேம்படுத்தி இளமை தோற்றத்தை பாதுகாக்கிறது.
புற்று நோய் தடுப்பு
நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. மத்திய தரை கடல் பகுதிகளில் வாழும் மக்கள் அன்றாடம் ஆலிவ் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களிடம் எந்த ஒரு வகையான புற்று நோய்களும் அவர்களிடம் தோன்றுவது மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.