குழந்தை சிகப்பாக பிறக்க வழிமுறை
இன்றைய காலத்தில் பலரும் சிவப்பான குழந்தை பிறக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். குழைந்த சிவப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் என்றால் அனைவரும் சட்டென்று கூறுவது பாலில் குங்கும பூவை கலந்து சாப்பிடுவதே. ஆனால் அதை தவிர்த்து குழந்தை சிகப்பாக பிறக்க வேறு சில வழிகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
குழந்தை சிக்கப்பாக பிறக்க கர்ப காலங்களில் தினமும் சிறிதளவு கோதுமையையும், ராகியையும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 2 :
பாதாம், பிஸ்தா, முந்திரி இந்த மூன்றையும் ஒரு நாளை இரண்டு என்ற விகிதத்தில் கர்ப்ப காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 3 :
கர்ப காலத்தில் தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு பிரசவ நேரத்தில் இது வலியை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பு 4 :
பிரசவ காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் சிகப்பான குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 5 :
உணவில் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதே போல இரண்டாவது மாதத்திற்கு மேல் கேரட் ஜூஸ் குடுத்து வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குழந்தையின் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர்களின் மரபணுக்கள். ஆகையால் என்ன தான் சாப்பிட்டாலும் சிலருக்கு மாநிறத்திலோ அல்லது அழகிய கருமை நிறத்திலோ குழந்தை பிறக்க காரணம் மரபணுக்களே.
மேலே கூறிய குறிப்புகளை பின்பற்ற நினைப்போர் மருத்துவர்களை ஒருமுறை ஆலோசித்த பிறகு பின்பற்றுவது சிறந்தது. இது போன்ற மேலும் பல மருத்துவ குறிப்புகள் மற்றும் சித்த மருத்துவம் சம்மந்தமான குறிப்புகளை அறிய தெய்வீகம் முக நூல் பக்கத்தை லைக் செய்யவும்.