வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துகளில் ஒன்றாக வைட்டமின்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து கரையும் தன்மை கொண்ட கொழுப்பு ஊட்டச் சத்துக்களின் எட்டு மூலப்பொருட்களின் கூட்டாக இருக்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் இயற்கையாகவே இந்த வைட்டமின் ஈ சத்து அதிகம் நிறைந்திருக்கின்றன. அப்படியான இந்த வைட்டமின் ஈ ஊட்டச்சத்தை நாம் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் உடல்நல ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் ஈ பயன்கள்
பித்த நீர் சுரக்க
ஒரு சில நபர்களுக்கு கல்லீரலில் உணவை செரிமானம் செய்வதற்கு தேவையான பித்த நீர் சுரக்க முடியாமல், உணவு செரிமானம் அடைவது பாதிக்கப்பட்டு அஜீரணம் போன்ற பல செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் நீரில் கரையக் கூடிய தன்மை கொண்ட வைட்டமின்-சி ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் ஈரலில் பித்த நீர் சுரப்பு அதிகரித்து, செரிமான கோளாறுகள் ஏற்படாமல் உணவை நன்கு செரிமானம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கின்றது.
தசைகள் வலிமை பெற
நமது உடல் தசைகளில் சுருங்கி விரியும் தன்மை மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை சீராக இருக்க வைட்டமின் ஈ சத்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் ஈ ஊட்டச்சத்து அதிகம் உண்பவர்களுக்கு உடலில் தசைகள் சுருங்கி விரியும் தன்மை குறைவது மற்றும் ரத்த அழுத்த குறைபாடுகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் கடுமையான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்படுகின்ற சிறிய அளவிலான காயங்களை போக்கி உடல் நலனை மேம்படுத்துகிறது.
கண்புரை நீங்க
நமது கண் பார்வைத்திறன் கூர்மையாகவும் தெளிவாகவும் இருப்பதற்கு வைட்டமின் சத்துக்கள் அவசியமாக இருக்கிறது. சீனாவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்தை அதிகமாகக் உட்கொண்ட நபர்களுக்கு வயது முதிர்வு காரணமாக கண்களில் கண்புரை ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருப்பதற்கும் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உதவுவதாக அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற
மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இருப்பினும் அந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். வைட்டமின் ஈ சத்து ஒரு இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப் பொருளாக செயல்படுகிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமை படுத்துவதோடு, உடலில் இருக்கின்ற செல்கள் அனைத்திற்கும் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வல்லமையையும் கொடுக்கிறது.
இதயம் நலம் பெற
வைட்டமின் ஈ ஊட்டச்சத்தில் ட்ரைக்கோடெரோல் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இது மனிதர்களின் உடலில் இருக்கின்ற நரம்புகளில் ரத்தம் உறைந்து விடாமல் தடுத்து ஆர்த்திரோஸ்க்லேரோசிஸ் எனப்படும் இதய சம்பந்தமான பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு ஆன்டி – ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு ஃப்ரீ ரேடிகல்ஸ் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்புகளுக்கு அதிக அளவு பிராண வாயு கிடைக்காமல் தடுத்து உடல்நலனை பாதுகாக்கிறது.
தலைமுடி அழகாக
மனிதர்களின் தலைமுடி பல வகையில் நன்மை அளிக்கும் ஒரு ஊட்டச்சத்தாக வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் சுற்றுப் புற காரணிகளால் தலைமுடி பாதிப்பதை தடுக்கிறது. தலையின் முடிகளின் வேர் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. மேலும் அடர்த்தியான தலை முடியையும், இயற்கையான தோற்றத்தையும் தருகிறது. வழுக்கை விழுந்த இடங்களில் மீண்டும் முடி வளர உதவுகிறது.
நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்க
அதிக உடல் எடை சிறுநீரக உறுப்புகளின் பாதிப்பு தோலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் சோர்வு மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவை மனிதர்களின் உடலில் இருக்கின்ற நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஆர்மோன்கள் அளவுகளில் ஏற்படும் மாறுதல்களால் உண்டாகக்கூடிய குறைவாக இருக்கிறது. வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உடலில் இருக்கின்ற எண்டோக்ரைன் (endocrine) எனப்படும் நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதோடு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களின் சுரப்பை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
அல்சைமர் நோய்
அல்சைமர் நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு வகையான தீவிர ஞாபக மறதி நோய் அல்லது குறைபாடாகும். ட்ரைக்கோடெனோல் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்த வைட்டமின் ஊட்டச்சத்தை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு நரம்பு சம்மந்தமான வியாதிகள் ஏற்படுவது குறைந்து, எதிர்காலங்களில் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் ஏற்படாமல் தடுப்பதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.
புற்று நோய் பாதிப்புகள், பக்கவிளைவுகள் குறைய
வைட்டமின் ஈ ஊட்டச்சத்து புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கதிர்வீச்சு மட்டும் டயாலிசிஸ் சிகிச்சைகளால் ஏற்படுகின்ற பாதிப்புகளை வெகுவாக குறைக்க உதவுகிறது. உடலில் இருக்கின்ற உரோமங்கள் உதிர்வது, நுரையீரலில் பாதிப்பு போன்றவை புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது ஏற்படும் பக்க விளைவுகளாக இருக்கிறது. இவற்றையும் போக்கி புற்றுநோய் வெகுவாக குணமாக வைட்டமின் ஈ சத்து உதவுகிறது. மேலும் மார்பகம், புரோஸ்டேட் உறுப்பு, கல்லீரல் மற்றும் தோல் சம்மந்தமான புற்றுநோய்கள் ஏற்படாமல் வைட்டமின் ஈ ஊட்டசத்து காக்கிறது.
கர்ப்பிணி பெண்கள்
வைட்டமின் ஈ கருவுற்ற பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் கருவுற்ற முதல் மூன்று மாதம் காலத்திற்கு சரியான அளவில் வைட்டமின் ஈ சத்துக்களை உட்கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. குழந்தையை பெற்றெடுத்த பெண்களும் குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை வைட்டமின் ஈ ஊட்டச்சத்து உணவுகளை பெண்களும் குழந்தைகளும் உண்பது மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.