பீட்ரூட் ஜூஸ் பயன்கள்
உணவில் பதார்த்தங்களாக பல காய்களை பல்வேறு வகையில் பக்குவப்படுத்தி உண்கிறோம். அதில் ஒரு முறை தான் ஜூஸ் பிழிந்து சாப்பிடுவது. பீட்ரூட் காய் பல அத்தியாவசியமான சத்துக்களை கொண்ட ஒரு காய்வகையாகும். இந்த பீட்ரூட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
தோல் நலம்:
பல காரணங்களால் சிலருக்கும் தொழில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தும் நபர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.
தலைமுடி:
தலைமுடி நன்றாக இருப்பது நல்ல உடல் நலத்தின் அறிகுறியாகும். சிலருக்கு தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நீக்க தினந்தோறும் ஒரு வேலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது.
ரத்தம்:
ரத்தத்தில் “ஹீமோகுளோபின்” என்ற புரத பொருள் ரத்தத்தில் சரியான அளவு இருப்பது அனைவருக்கும் அவசியமாகும்.நாளுக்கு ஒருமுறை பீட்ரூட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு, ரத்தத்தில் இந்த புரத பொருள் சரியான அளவில் இருக்கும் படி செய்கிறது.
கழிவுகள்:
தினந்தோறும் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல கழிவு பொருட்கள் நமது உள்ளுறுப்புகளில் சேர்ந்து கொள்கின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும்.
அனீமியா:
ரத்தத்தில் சிவப்பணுக்களின் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது தினமும் வேளை பீட்ரூட் ஜூஸ் அருந்த சிவப்பு அணுக்கள் அதிகம் உற்பத்தியாகி ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு நீங்கும்.
புற்று நோய்:
நமது உடலில் பல இடங்களில் புற்று நோய் ஏற்படுகிறது. அதில் ஈரல் புற்று மாற்று கணைய புற்று மிகவும் ஆபத்தான புற்று நோய்களில் ஒன்று. பீட்ரூட் ஜூசை தினமும் ஒரு வேளையாவது அருந்துவது இவ்வகை புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சிறுநீரகம்:
உடலின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. பீட்ரூட் ஜூசை அருந்துவதால் சிறுநீரகங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. சிறுநீரும் நன்கு பிரிய உதவுகிறது
உடல் சக்தி: ஒரு சிலருக்கு எந்த பணிகளை செய்தாலும் சுலபத்தில் உடல் சோர்ந்து விடுகிறது. பீட்ரூட் ஜூசை காலையில் தினமும் அருந்துபவர்களுக்கு ஸ்டமினா எனப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் உடலசக்தி ஏற்படுகிறது.
மறதி நோய் :
வயது ஏற ஏற மூளை செல்களின் வளர்ச்சி குறைவதால் சிலருக்கு ஞாபக மறதி உண்டாகிறது. பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும்.
கல்லீரல்:
உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும். தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூசை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும்.
ஆர்த்ரைடிஸ்:
வயதானவர்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் ஒன்றாக ஆர்த்ரைடிஸ் இருக்கிறது. இந்த நோயால் உடலிலுள்ள அனைத்து மூட்டுகளிலும் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். இதற்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த நிவாரணமாக இருக்கும்.
ரத்த அழுத்தம்:
உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்று பலரையும் பாதிக்கிறது. பீட்ரூட் ஜூசை இப்பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் அதிகம் பருகி வருவது இந்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த நிவாரணமாக இஇருக்கிறது.