புடலங்காய் நன்மைகள்
நாம் தினந்தோறும் சாப்பிடும் மதிய மற்றும் இரவு உணவுகளில் காய்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில் ஒன்று தான் புடலங்காய். புடலங்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புடலங்காய் நன்மைகள்
ஜுரம்
ஜுரம் என்பது பொதுவாக உடலின் சராசரியான வெப்பநிலையை அதிகரிக்க செய்து உடலை பலவீனமாக்கி செயல்பட முடியாமல் செய்து விடும் ஒரு நோயாகும். ஜுரங்களில் டைபாய்டு, வைரல் சுரம் மற்றும் மலேரியா நோயால் ஏற்படும் ஜுரத்தின் போது தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட ஜுரம் நோய்களும் நீங்கும்.
மலச்சிக்கல்
பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் உடல் மற்றும் மனஅளவில் மிகுந்த அவஸ்தையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.
இதயம்
நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
கல்லீரல்
மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
சர்க்கரை வியாதி
ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
வயிற்று போக்கு
கிருமிகள் தொற்று ஏற்பட்ட உணவுகளை உண்பதாலும், உடல் உஷ்ணம் மற்றும் சுற்றுப்புற வெப்ப நிலை அதிகரிப்பாலும் சிலருக்கு சாதாரண வயிற்று போக்கு முதல் சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுகிறது. இப்படி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட நபர்கள் புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவினை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும்.
உடல் எடை குறைப்பு
அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
தலைமுடி
தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.
ஆண்மை குறைபாடு
உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது குறிப்பாக ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
நோய் எதிர்ப்பு
எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.