Advertisement

வாத நோய் குணமாக வைத்தியம்.

வாத நோய் குணமாக வைத்தியம்.

நமது உடலில் வாதம், பித்தம், கபம் என்று மூன்று குணங்கள் இருக்கின்றன. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சமநிலையில் இருக்கும் பட்சத்தில் நமது உடல்நிலையில் எந்த ஒரு குறைபாடுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒன்று சமநிலை தன்மை இழந்து அதன் இயல்பு நிலை கூடவோ அல்லது குறையவோ செய்தால் நாம் நோய்வாய்ப்படுகிறோம். அப்படி நம் உடலில் வாதம் என்கிற குணத்தின் தன்மை அதிகரிப்பதால் முக வாதம், பக்கவாதம், முடக்கு வாதம் என உடலில் பல பகுதிகளை இந்த வாதம் பாதிக்கிறது. இந்த வாதத்திற்கான வீட்டு வைத்திய முறைகளை காண்போம்.

vatham

வாத நோய் ஏற்பட காரணம்

நரம்புகளில் அதிகம் அழுத்தம் தரும் வகையான பணிகளை செய்வதால் வாதம் ஏற்படக்கூடும். அதே போல மிக கடுமையான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியே இல்லாமை போன்றவையும் வாதத்திற்கான காரணமாகும். வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை அதிகம் உண்பதன் மூலமும் வாத நோய் ஏற்படுகிறது.

வாத நோய் அறிகுறிகள்

  • உடலின் முக்கியமான மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும்.

  • உடலின் கை கால்கள் அடிக்கடி விறைத்து கொள்ளும்.

  • உடல் சரிவர இயங்க முடியாது.

  • நரம்புத்தளர்ச்சி மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளையும் காட்டும்.

vatham

வாத நோய் குணமாக வைத்திய குறிப்பு

பூவரசன் மரம்

முதிர்ந்த பூவரசன் மர பட்டைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி, அதில் 20 கிராம் தேன் விட்டு கலந்து மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இக்காலங்களில் உணவுகளை உப்பில்லாமல் உண்ண வேண்டும்.

மாவிலங்கம் இலை

இரண்டு கைப்பிடியளவு மாவிலங்கம் மர இலைகளை நீரில் போட்டு, அதை 50 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி அதில் 50 மில்லி தேங்காய்ப்பால் கலந்து, தினமும் மூன்று வேளை குடித்து வர முடக்குவாதம் நீங்கும்.

mavilanga ilai

முருங்கை கீரை

முருங்கை உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களை கொண்டது. முருங்கை மரத்தின் இலைகளை பக்குவம் செய்து உண்ண வாதம் குணமாகும்.

Murungai keerai

கொள்ளு

கொள்ளு மிகச்சிறந்த தானியவகைகளில் ஒன்றாகும். இதை அவ்வப்போது உணவாக கொள்ள வேண்டும். மேலும் இந்த கொள்ளு தானியங்களை ரசமாக வைத்து அருந்த வேண்டும். இதன் மூலம் வாதம் குணமாகும்.

kollu

முடக்குவாத எண்ணெய்

நாட்டு மருந்து மற்றும் சித்த வைத்திய கடைகளில் முடக்குவாத எண்ணெய் கிடைக்கும். அதை உடலில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வருவதால் எல்லாவிதமான வாதங்களும் நீங்கும்.