Advertisement

குப்பைமேனி பயன்கள்

குப்பைமேனி பயன்கள்

சித்த மருத்துவத்தில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகளை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மனிதர்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் வளரும் மூலிகைகளாக உள்ளது. ஆனால் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இருக்கின்றன. அப்படி ஒரு மூலிகையான குப்பைமேனி செடியை பற்றியும், அதன் பயன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குப்பைமேனி பயன்கள்

வீக்கம்

எதிர்பாராத விதமாக உடலில் நமக்கு எங்காவது அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. அப்படியான சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி போன்றவை குறையும்.

குடற்புழு

குடலில் குடற்புழு எனப்படும் தீங்கு ஏற்படுத்தும் உயிரிகள் சில வகை உணவுகள் மூலம் நமது உடலுக்குள் நுழைந்து குடல்களில் தங்கிவிடுகிறது. இந்த குடற்புழு பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.

கிருமிநாசினி

குப்பைமேனி இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

விஷக்கடி

நகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பாம்புகளும் அங்கு அதிகம் இருக்கிறது. விஷ பாம்புகள் பலவகை இருந்தாலும் “கண்ணாடி விரியன்” பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், விஷம் உடலில் வேகமாக பரவுவதை நிறுத்தும்.

புண்கள்

எப்போதாவது ஏற்படும் சில காயங்கள் சில நாட்களில் புண்களாக மாறிவிடுகிறது. ரசாயனங்கள் நிறைந்த மருந்துகளை இந்த புண்களுக்கு தடவுவதற்கு பதிலாக குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.

வயிறு

இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மலேரியா

மலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு நோயாகும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிடின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியது மலேரியா நோய். இந்த நோய்க்கான ஆங்கில வழி மருந்தை உட்கொள்ளும் போது குப்பைமேனி இலைகள், சாறு போன்றவற்றை மருந்தாக உட்கொண்டு வந்தால் இந்நோய் கூடிய விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு

குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலிலி இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

முடிநீக்கம்

பெண்கள் சிலருக்கு உடலில் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் உதிக்கின்றன. குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.