ஹீமோகுளோபின் அதிகரிக்க பாட்டி வைத்தியம்
ஹீமோகுளோபின் என்பது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகை புரதம் ஆகும். இதில் இருப்புசத்து அதிகம் இருக்கும். நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள்:
நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும். இதில் அணைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.
ஹீமோகுளோபின் குறைய காரணம்:
சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிற்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைப்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் உணவில் பீட் ரூட்டை சேர்த்துக்கொள்வது அவசியம். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதோடு பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் மூலம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாப்பாட்டில் பீட்ருட்டை சேர்த்துக்கொள்ள முடியாதவர்கள் பீட்ருட்டை ஜூஸ் குடித்துவந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும்.
குறிப்பு 2 :
உலர்ந்த கருப்பு திராட்சையை நீரில் ஊறவைத்து உண்பதன் மூலம் ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும். மூன்று உலர்ந்த கருப்பு திராட்சையை எடுத்துக்கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு அதை ஒரு டம்ளர் நீரில் போட்டுவிட வேண்டும். காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் ஒரு திராட்சையை மட்டும் எடுத்து உண்ணவேண்டும். மதியம் ஒரு திராட்சை, மாலை ஒரு திராட்சை என மூன்று திராட்சையையும் உண்டு விட்டு அந்த நீரையும் குடித்து விட வேண்டும். இதே போல கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படி 9 நாட்கள் உன்ன வேண்டும்.
முதல் நாள் – காலை 1, மதியம் 1, மாலை 1 = 3
2-வது நாள் – காலை 2, மதியம் 2, மாலை 2, = 6
3-வது நாள் – காலை 3, மதியம் 3, மாலை 3, = 9
4-வது நாள் – காலை 4, மதியம் 4, மாலை 4, = 12
5-வது நாள் – காலை 4, மதியம் 4, மாலை 4, = 12
6-வது நாள் – காலை 4, மதியம் 4, மாலை 4, = 12
7-வது நாள் – காலை 3, மதியம் 3, மாலை 3, = 9
8-வது நாள் – காலை 2, மதியம் 2, மாலை 2, = 6
9-வது நாள் – காலை 1, மதியம் 1, மாலை 1, = 3
இப்படி ஒன்பது நாட்கள் உண்ட பிறகு உடலில் நல்ல மாற்றம் தெரியும். மாற்றம் இல்லை என்றால் மீண்டும் இதே முறையை தொடரலாம்.
குறிப்பு 3 :
தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகிய மூன்றையும் காலை இரவு என இருவேளையும் 30 மில்லி அளவு பருகி வந்தால் ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும். இவை மூன்றையும் கலந்து குடிக்க இயலாதவர்கள் தினமும் 100 கிராம் தேனை காலை மதியம் இரவு என மூன்று வேளைகளாக பிரித்து உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும்.
குறிப்பு 4 :
ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்று பலர் குழம்புவதுண்டு. நாம் தினம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள், பட்டாணி, பீன்ஸ், மாம்பழம் போன்றவற்றில் ஏதோ ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். அதோடு தினமும் காலையில் துளசி நீர் குடிப்பது, இரண்டு அல்லது மூன்று துளசி இலையை உண்பது போன்றவற்றின் மூலமும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியம்.