Advertisement

கிராம்பு பயன்கள்

கிராம்பு பயன்கள்

நமது பாரம்பரிய சமையலில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் சிலவற்றை வாசனை பொருட்கள் என அழைக்கின்றனர். ஏனெனில் இவற்றை சமையலில் சேர்க்கும் போது உணவில் ருசியை கூட்டுவதோடு சிறந்த வாசனையையும் உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட வாசனை பொருட்களில் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு பொருள் தான் “கிராம்பு”. என்னென்ன குறைபாடுகளை கிராம்பு மூலம் தீர்க்க முடியும் என்பதை இங்கு அறியலாம்.

கிராம்பு பயன்கள்

காலரா

காலரா எனும் நோய் கிருமிகள் நிறைந்த தண்ணீர் அருந்துவதன் மூலம் அதிவிரைவாக மக்கள் பலருக்கும் பரவக்கூடிய நோயாகும் இந்த நோயால் பேதி, வாந்தி போன்றவை ஏற்பட்டு இறுதியில் இறப்பு கூட நேரலாம். கிராம்பு, காலரா நோய்கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு உடலில் இருக்கும் காலரா கிருமிகளை அழிக்கிறது.

வாய், பல், ஈறு பிரச்சனைகள்

வாய் சம்பந்தமான பிரச்சனைகள், பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதில் யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் பற்களில் கிருமிகள் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. குளிர் காலங்களில் ஈறுகளின் வீக்கத்தால் அவதிபடுபவர்கள் ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் சற்று நேரம் அதக்கி வைத்திருந்தால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

தலைவலி

மனசோர்வு, ஜுரம், ஜலதோஷங்கள் போன்றவை ஏற்படும் போது பலருக்கும் மிகுந்த தலைவலி உண்டாகிறது. இப்படியான நேரங்களில் சிறிதளவு கிராம்பை இடித்து பொடியாக்கி நீர்விட்டு குழைத்து அதனுடன், ராக் சால்ட் உப்பை சேர்த்து நன்கு கலந்து, சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் விரைவிலேயே தலைவலி நீங்கும். ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்களும் இம்மருத்துவ முறையை கடைபிடித்து நன்மை பெறலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.

வயிறு சம்பந்தமான நோய்கள்

கிராம்பு உடலில் குறிப்பாக வயிற்றில் இருக்கும் கிருமி தொற்றுகளை நீக்க வல்லது. மேலும் அஜீரணம், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லைகள், அடிக்கடி வாந்தி ஏற்படுவது போன்ற அத்தனை பிரச்சனைகளையும் கரம்பையோ அல்லது கரும்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்களையோ சாப்பிட்டு வருபவர்களுக்கு விரைவில் நீங்குகிறது.

புற்று நோய்

புற்று நோய் யாருக்குமே வரக்கூடாத ஒரு மிக கொடிய நோயாகும். இநோய்யை குணப்படுத்த அதிக விலை கொண்ட மருந்துகளை பயன்படுத்தும் அதே நேரத்தில் கிராம்பையும் உணவில் சேர்த்து பயன்படுத்துவது சிறந்தபலனளிக்கும். கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் உடலின் புற்று நோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி பெறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா என்கிற நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்பட்டவர்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கு தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு கிராம்பிலிருந்து செய்யப்பட்ட கிராம்பு எண்ணெய் மூன்று துளிகளுடன் தேன், வெள்ளைப் பூண்டுச் சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.

சிறுநீரக பிரச்சனைகள்

நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க செய்வதில் சிறுநீரகங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் ஒரு சிலருக்கு இந்த சிறுநீரகங்களில் கற்கள் அடைப்பு, மற்றும் மூத்திர பை தொற்று போன்றவையால் பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை போக்குவதற்கு சிறிது கிராம்பு மற்றும் மிளகை எடுத்து நன்கு அரைத்து அதை திராட்சை சாறுடன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் நீங்கும்.

மூட்டு வலி

வயதானவர்களிடம் அதியாகும் காணப்படும் ஒரு நோயாக மூட்டுவலி இருக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு குளிர்காலங்களில் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி மற்றும் விரைப்பு ஏற்படுகிறது. இச்சமயங்களில் சிறிது கிராம்புடன் சுக்கை சேர்த்து இடித்து, கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக மூட்டு வலி பிரச்சனைகள் நீங்கும்.

ரத்த ஓட்டம்

கிராம்பு இயற்கையிலேயே உஷ்ணம் மிகுந்த ஒரு மூலிகை மருத்துவ பொருளாகும். எனவே இதை சாப்பிடுபவர்களுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க கிராம்பு மற்றும் கிராம்பு கலந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.