தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மேலைநாடுகளை சார்ந்தவர்கள் பாரத நாட்டிற்கு வியாபாரத்திற்காக வர தொடங்கிய காலத்தில், அவ்வியாபாரிகள் மூலகமாக இங்கிருந்த விளை பொருட்கள் பல உலகின் பல நாடுகளுக்கும் சென்றது. அதே போல் உலகின் மற்ற நாடுகளிலிருந்த பல விளை பொருட்கள் பாரதத்திற்கு அறிமுகமாயின. அப்படியான ஒரு விளை பொருள் தான் பப்பாளி. கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் இந்த பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
பப்பாளி நன்மைகள்
முகத்தோல் சுருக்கம்
முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் காரணமாக சிலர் தங்களுக்கு வயதான தோற்றம் உண்டாவதாக எண்ணி வருந்துகின்றனர். இத்தகையவர்கள் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் பிசைந்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.
நரம்பு தளர்ச்சி
மனப்பதற்றம் அதிகமுள்ளவர்களும், உடலில் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கும்.
நோய் எதிர்ப்பு
பப்பாளி பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி பப்பாளி பழத்திற்கு உண்டு. வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
வயிற்று பிரச்சனைகள்
ஒரு மனிதனின் வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் சிறிது ஒரு பப்பாளி பழ துண்டுகளை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
இதயம்
பப்பாளி பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பப்பாளிப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.
கல்லீரல்
சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பப்பாளிப்பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் ஒரு பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.
ஆண்மை குறைபாடு
இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
மாதவிடாய்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உடலிலிருக்கும் சத்துகள் மற்றும் பலம் குறைகின்றது. மாதவிடாய் தினங்கள் கழிந்த பின்பு பப்பாளி பழங்கள் சாப்பிட்டு வந்தால் பெண்கள் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும்.
சர்க்கரை வியாதி
இன்று பலரையும் பாதிக்கும் நோயாக நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி இருக்கிறது. பப்பாளி சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பழமாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.
ஊட்டச்சத்து
நாவல் பலம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்பாளி சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.