எள்ளு உருண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நமது அன்றாட உணவுகளை சாப்பிட்டது போக அவ்வப்போது சிறு நொறுக்குத்தீனிகள் மற்றும் இதர சிற்றுண்டிகளை சாப்பிடுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. அப்படியான சமயங்களில் துரித உணவுகள் போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளாமல் உடலுக்கு நமையை செய்யும் உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறான ஒரு உணவு வகை தான் “எள் உருண்டை”. இந்த எள் உருண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்வோம்.
எள்ளு உருண்டை நன்மைகள்
சத்து உணவு
மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிக கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.
எலும்புகள்
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.
தலைமுடி
மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது. எள் உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறையும். முடிகள் நல்ல பளபளப்பை பெரும்.
ஆஸ்துமா
ஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் இன்ன பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
புரதம்
எள் புரத சத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
புண்கள்
உடலில் பலருக்கும் புண்கள் வெட்டுக்காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால், அந்த எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.
போதை பழக்கம்
மது, சிகரட் போன்ற போதைப்பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களின் உடலில் அதிகளவு நச்சுக்கள் தங்கியிருக்கும். இந்த போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் ஒரு எள் உருண்டையை சாப்பிட அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்
படபடப்பு
சிலர் எப்போதும் ஒருவித படபப்புத்தன்மையுடன் இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.
நோய் ஆற்றும் தன்மை
எள் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்ட வேதி பொருட்கள் அதிகம் கொண்டது. எள் உருண்டையை குறிப்பாக குழந்தைகள் சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்கள் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது குறையும். ஜுரம், சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும்.
தோல்
எள் உருண்டையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு.