Advertisement

பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ

பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ

உடல்நலத்திற்கு தேவையான உணவுகளை தேர்தெடுத்து உண்ணும் உண்ணும் போது நாம் பல நோய்கள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நமது நாட்டு உணவுகளில் தவறாமல் இடம் பெறுவது கீரைகள் ஆகும். கீரைகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் “பொன்னாங்கன்னி கீரை” அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக இருக்கிறது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ponnanganni

பொன்னாங்கன்னி கீரை பயன்கள்

உடல் எடை குறைய 

அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதில் பொன்னாங்கன்னி கீரை உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது. தினமும் பொன்னாங்கன்னி கீரை சமைக்கும் போது அதனுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கண்கள் 

வயதாகும் காலம் வரை அக்காலத்தில் நமது முன்னோர்கள் மூக்கு கண்ணாடி அணியாமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் உணவில் கீரை வகை உணவுகளை அதிகம் சேர்த்து கொண்டனர். அதிலும் பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 30 நாட்களுக்கு சாப்பிடும் நபர்களுக்கு கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும்.

ponnannganni

ரத்த சுத்தி 

நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் நிறைந்துள்ளன இது நமது ரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, மிக சிறியளவில் நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.

சருமம் 

நமது சருமம் ஆரோக்கியமாக இருந்தால் எப்போதும் இளமை தோற்றம் நீடிக்கும். சருமத்தில் ஈரப்பதத்தை காப்பதில் பொன்னாங்கன்னி கீரை நன்கு செயல்படுகிறது. தினமும் பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேனி சிவப்பழகு பெறுகிறது.

ponnanganni

மூலம், மண்ணீரல் 

கடுமையான மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் மண்ணீரலின் செயல்பாடும் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளும் தீர்ந்து நலம் பெற பொன்னாங்கன்னி கீரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

சளி, ஆஸ்துமா 

நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும் போது சிலருக்கு இருமல், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனைகளை போக்க பொன்னாங்கன்னி இலை சாறில், பூண்டு சாறு சிறிதளவு கலந்து பருகினால் இவையெல்லவற்றிற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ponnanganni

தாய்ப்பால் சுரப்பு 

புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகள் முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பால் அருந்துவது மிகவும் அவசியம். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய நிலையிலிருக்கும் பெண்கள் பொன்னாங்கன்னி கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இதயம் 

நீண்ட நாட்கள் வாழவும், உடல் நன்றாக இயங்கவும் முக்கிய உறுப்பான இதயத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதோடு ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம். பொன்னாங்கன்னி கீரையை வாரம் மூன்று நன்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ponnanganni

ஊட்டச்சத்து 

கீரைகள் அனைத்துமே உடலுக்கு தேவையான பல சத்துகளை கொண்டதாகும். பொன்னாங்கன்னி கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் தேவையான இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இதில் ஏராளம் உள்ளன எனவே பொன்னாங்கன்னி கீரை ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக கருதப்படுகிறது.

உடல் எடை கூட 

பொன்னாங்கன்னி கீரை ஒரு பக்குவத்தில் உண்டால் உடல் எடை குறைக்க உதவும். இதே பொன்னாங்கன்னி கீரை உடல் எடை கூடவும் உதவுகிறது. துவரம் பருப்புகளோடு பொன்னாக்கன்னி கீரையை வதக்கி, சுத்தமான பசுநெய் சாப்பிட்டு வந்தால் வெகு சீக்கிரத்தில் உடல் எடை கூடும். மேலும் உடலுக்கு வலிமையையும் தரும்.