Advertisement

தலைமுடி பிரச்சனைக்கு ஒரேடியாக ‘குட் பை’ சொல்ல வைக்கும் நம்ம ஊரு பாட்டி வைத்தியம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமுடி பிரச்சனைக்கு ஒரேடியாக ‘குட் பை’ சொல்ல வைக்கும் நம்ம ஊரு பாட்டி வைத்தியம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமுடி பிரச்சனை பெரிய தலைவலியாக இன்றைய காலத்தில் அனைவருக்குமே இருந்து வருகிறது. தலைமுடி உதிர்வதற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான். சரிவிகித உணவு உட்கொள்வதன் மூலம் மிக எளிதாக தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அந்த காலங்களில் எல்லாம் பாட்டிமார்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். திருமணத்தில் மணப்பெண்ணின் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவளின் குணத்தையும் தீர்மானித்தனர். அந்த அளவிற்கு கூந்தல் வளர்ச்சியை முக்கியமாக நமது முன்னோர்கள் கருதி வந்தனர். எனவே அவர்கள் பயன்படுத்திய சில எளிய வழிமுறைகளை இப்பதிவில் நாம் இனி காண இருக்கிறோம்.

long-hair

பெண் பார்க்கும் படலம் நடக்கும் போது, பெண்ணின் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்த்தனர். நீண்ட கூந்தல் இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு உகந்தவள், ஆரோக்கியமானவள் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. நவீன காலத்தில் முடி உதிர்வுக்கு முக்கிய காரணியாக இருப்பது காற்று மாசுபாடு. ஆனால் அந்த காலங்களில் அந்த பிரச்சினை எல்லாம் இல்லை. சுத்தமான காற்று, நீர், ஆகாரம் அனைத்தும் கிடைத்தது. இருந்தும் ஒரு சில பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருக்காது. அதற்காக நமது முன்னோர்கள் சில எளிய கை வைத்திய முறைகளை கையாண்டனர்.

இது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு பலனடையுங்கள். முதலாவதாக கூந்தலின் வேர் கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். அதற்காக நம் முன்னோர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்தினர். நன்றாக இருக்கும் இரண்டு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை கைகளினால் மசிய பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். கூந்தல் மணமாக இருப்பதற்கு சிட்டிகை அளவு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை கூந்தல் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக காய்ந்ததும் சாதாரண ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்தி கூந்தலை அலசிவிடவும். இதனால் கூந்தலின் வேர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து செழித்து வளர்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் பட்டுப்போன்ற கூந்தலும் கிடைக்கும். முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

banana-hair-pack

இரண்டாவதாக நாம் பார்க்கப் போவது முட்டையை வைத்து கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை கொடுப்பது. இதை நிறைய பேர் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வாசம் பிடிக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக யாரும் செய்திருக்க மாட்டார்கள். ஒரு முட்டையுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் அந்த அளவிற்கு நீச்ச வாசம் வராது. இக்கலவையை நன்றாக அடித்துக்கொண்டு முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து தலையை அலசி விடவும். இந்த முறை நிச்சயம் நல்ல பலனைத் தரும். மூன்று மாதங்களாவது இதனை வாரம் ஒருமுறை செய்து பார்ப்பது நல்லது. இந்த முறையை செய்து பார்க்கும் பொழுது தலையை அலசுவதற்கு கட்டாயம் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முல்தானி மிட்டியை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு இரவில் நன்றாக தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் ஊறவைத்த முல்தானி மிட்டியை வேர் முதல் நுனி வரை பேக் போட்டுக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து சாதாரணமாக அலசிவிடவும். இம்முறை பயன்படுத்தும் பொழுது செயற்கை ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. மாற்றாக சீயக்காய் பயன்படுத்தலாம்.

mutani-mitti-hair-pack

எந்த ஒரு கை வைத்தியத்தை செய்வதானாலும் உடனே பலன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. அப்படி உடனே பலன் கிடைப்பதாக இருந்தால் அது நிச்சயம் உண்மையாக இருக்காது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகளில் உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா அதை தொடர்ந்து 3 மாதமாவது பயன்படுத்துங்கள். இடையில் எதையும் நிறுத்துவதோ! மாற்றுவதோ கூடாது. பின்னர் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களின் கூந்தல் வளர்ச்சியை நிச்சயம் காண்பீர்கள்.