Advertisement

குடுகுடுவென்று ஓடி ஒளியும் நண்டிற்குள் இத்தனை ரகசியங்கள் ஒளிந்து உள்ளதா? இது தெரியாம போச்சே!

குடுகுடுவென்று ஓடி ஒளியும் நண்டிற்குள் இத்தனை ரகசியங்கள் ஒளிந்து உள்ளதா? இது தெரியாம போச்சே!

நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. கடல் நீரில் இருக்கும் உயிரினங்களில் 20 சதவீத இடத்தை நண்டு இனங்கள் வகிக்கின்றன. கடல் நண்டுகளை விட நன்னீர் ஆற்று நண்டு, கழனிகளில் வாழும் நண்டு தான் மிகுந்த சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. பொதுவாக நண்டுகளை வாங்கி உண்பவர்கள் அமாவாசைகளில் வாங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பௌர்ணமியில் தான் நண்டுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. எனவே அமாவாசையில் நண்டுகள் வாங்கினால் அதிக சதைபற்றுடன் மிகுந்த சுவையுடன் இருக்குமாம். வயல்வெளிகளில் வாழும் நண்டுகள் மருத்துவத்திற்கு பெருமளவு பயன்படுகின்றது. நண்டுகளில் ஓட்டில் இருந்து பக்கவாதம் மற்றும் முதுகுத்தண்டு வலி நீக்கும் மருந்துகள் சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

nandu1

மருத்துவத்தில் மேற்கொள்ளபடும் அறுவை சிகிச்சையில் தையல் போட பயன்படுத்தபடும் கருப்பு நிற ‘கைட்டின்’ எனப்படும் நூல் போன்ற ஒரு பொருள் இந்த நண்டுகளின் ஓட்டில் இருக்கும் பசையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி மலட்டு தன்மையை போக்கும் குணம் கொண்டது இந்த வகை நண்டுகள்.

இன்றளவும் வட மாநிலங்களில் கை வைத்தியமாக இந்த நண்டுகளை மிளகுடன் ரசம் வைத்து கொடுக்கின்றனர். இதனால் நெஞ்சுசளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும். பல காலங்களாக கடைபிடிக்கப்பட்டு தீர்வு கண்டுவரும் இந்த குறிப்புகள் பலரும் அறியாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இது போல் நண்டுக்குழியில் இருக்கும் நீரில் என்ன பயன்கள் இருக்கின்றன என்று இப்பதிவில் காண்போம்.

nandu valai

கழனி நண்டுகள், ஆற்றங்கரை நண்டுகள் தனக்கென்ன தனி தனியாக பொந்துகள் அமைத்து வாழும். அந்த பொந்துகளில் நீர் நிரம்பி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நண்டுகள் வாழும் பொந்துகள் தான் என்று முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த பொந்துகளில் உள்ள நீரை தேங்காய் மூடி கொண்டு மெதுவாக கலங்காமல் எடுத்து சுத்தமான துணியில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் சேமிப்பது நல்லது. பின்னர் அதை கொண்டு போய் வெயில் படும் இடத்தில் ஒரு 3 மணி நேரம் வைக்கவும். அந்த நீர் லேசாக சூடேறியதும் பருகினால் எந்த நோயும் நொடியில் நீங்கும் என்று சித்தர்கள் குறிப்பில் கூறபட்டுள்ளது.

இந்த நீர் ஒவ்வாமையை நீக்க வல்லது. உடலில் இருக்கும் தடிப்புகள், எரிச்சல்களை போக்கும். தொடர் வாந்தி, தண்ணீர் தாகம் அதிகமாக இருப்பவர்கள் இந்த முறையை உபயோகப்படுத்தலாம். ஆறு, ஏரி, குளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் இந்த வகையான நண்டுகள் அழிவின் விளிம்பில் இருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக நண்டு வளர்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை காப்பாற்றினால் சமுதாயம் ஆரோக்கியத்துடன் வாழும்.

nandu

நண்டில் விட்டமின் சி, பி, தாமிரம், கந்தகம், மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், மாவுச்சத்து, கால்சியம், அயோடின் போன்றவை அதிகமாக காணப்படுகின்றன என்பது தான் அவசியமாக தெரிந்து கொள்ளவேண்டிய தகவல். இந்த நீரை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் நீச்ச நாற்றம் வீசும். எனவே சரியான முறையில் சுத்திகரித்து பயன்படுங்கள்.