தேமல் நீங்க கை வைத்தியம்
மனித உடலே ஒரு அதிசயமான இயற்கையின் படைப்பாகும். பல உறுப்புகளை கொண்ட இந்த மனித உடலை முழுவதும் மூடி மறைப்பதும், குளிர் மழை போன்றவற்றிலிருந்து காப்பது தோல் ஆகும். இந்த தோலின் தன்மை வயதிற்கு ஏற்றவாறு மாறும். அதுபோல அந்த தோலின் நிறம் ஒவ்வொரு மனித இனத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. இத்தகைய தோல் சம்பந்தமான பல வியாதிகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் தேமல் நோய் அல்லது குறைபாடு. இதை பற்றி மேலும் இங்கு தெரிந்து கொள்வோம்.
தேமல் ஏற்படுவதற்கான காரணங்கள்
தேமல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர் உடலில் இருக்கும் செல்களில் “மெலனின்” குறைபாடு ஏற்படுவதால் இந்த தேமல் உண்டாகிறது. இது ஆண்-பெண் என்று யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் ஏற்படலாம்.
தேமல் அறிகுறிகள்
உடலில் ஏதோ ஒரு பகுதியில் தோலின் நிறம் வெளுத்து காணப்படும். பிறகு உடலின் பிற பகுதிகளிலும் இந்த தோல் வெளுத்த தேமல் காணப்படும். ஒரு சிலருக்கு இந்த தேமல் ஏற்பட்ட இடங்களில் அரிப்பு இருக்கும்.
தேமல் குணமாக மருத்துவ குறிப்புக்கள்
துளசி
மூலிகை செடிகளில் பல மருத்துவ குணங்களை கொண்ட செடி வகை துளசி. இந்த துளசி இலைகளை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சசம் பல சாற்றை கலந்து தேமல் உள்ள இடங்களில் தடவ வேண்டும். இதன் மூலம் தேம்பல் குறையும்
உப்பு
உப்பு சிறந்த கிருமி நாசினியாகும். இந்த உப்புடன் துளசி இலைகளின் சாற்றை கலந்து தேமல் உள்ள இடங்களின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் தேம்பல் குறையும்
மருதாணி
பல மகத்துவங்களை கொண்டது மருதாணி செடியின் இலைகள். இந்த இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் வெங்காயத்தின் சாற்றை சில துளிகள் விட்டு கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் தேம்பல் குறையும்
அவரை
உணவாக கொள்ளக்கூடிய சிறந்த காய்களில் அவரையும் ஒன்று. இந்த அவரை செடி இலைகளின் சாற்றை காலையும், மாலையும் தேமல் ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் தேம்பல் குறையும்
பூண்டு
பல்வேறு உடல் குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படும் பூண்டின் சில பற்களை வெற்றிலையுடன் சேர்த்து, கசக்கி பிழிந்து காலை மாலை தடவி வர வேண்டும். இதன் மூலம் தேம்பல் குறையும்