Advertisement

மணலி கீரை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் தீரும் தெரியுமா?

மணலி கீரை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் தீரும் தெரியுமா?

அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட பல மூலிகைகள் நிறைந்த நாடு நமது பாரதம். அத்தகைய மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் மிகக் குறைவானவற்றையே நாம் உண்டு பயன் பெறுகின்றோம். நமது நாட்டில் கீரை வகைகள் பல உள்ளன. அதில் அதிகம் பேருக்குத் தெரியாத கீரை வகைகளில் ஒன்று தான் மணலிக்கீரை. மணலிக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

manali-keerai

மணலிக்கீரை பயன்கள்

மலச்சிக்கல் நீங்க

கீரைகள் அனைத்திலுமே நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதே போன்று இந்தஆ மணலி கீரையிலும் நார்ச்சத்து அதிகமுள்ளது. மணலிக் கீரை கிடைக்கும் காலங்களில் அவற்றை வாங்கி வாரம் இரு முறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு கோளாறுகள் நீங்கி, நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

மார்புச்சளி 

சிலருக்கு பனிக்காலங்களிலும், அதிகம் குளிர்ந்த உணவுகளை சாப்பிடும் போதும் மார்பு பகுதியில் சளி கட்டிக் கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மணலிக் கீரையை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை குடிநீராக கொடுத்து வந்தால் விரைவிலேயே கொடுக்க மார்புச் சளி, இருமல் போன்ற குறைபாடுகள் நீங்கும்.

manali-keerai

வயிற்றுப் பூச்சி நீங்க

குழந்தைகளின் வயிற்றில் கிருமிகள் அதிகம் இருப்பதால் அவர்கள் மிகவும் சோர்ந்து பலவீனமடைய கரணம் சாப்பிடும் உணவில் இருக்கும் அனைத்து சக்திகளையும் கிருமிகள் உறிஞ்சிவிடுவதே ஆகும். இந்த வயிற்று பூச்சிகளை கொல்வதற்கு மணலிக்கீரை சிறந்த மருந்தாகும். மணலிக் கீரையை நீர்விட்டு நன்கு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி, அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி பிறகு நான்கு நாள் இடைவெளிவிட்டு மீண்டும் மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் முற்றிலும் நீங்கும்.

ஞாபக சக்தி

இளமையில் நன்றாக இருக்கும் ஞாபக சக்தி வயது ஏற, ஏற குறைந்து விடுகிறது ஞாபக மறதி மனிதன் ஞாபக மறதி குறைபாடு ஏற்பட பித்த அதிகரிப்பே பிரதான காரணமாகும். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகிறது. இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.

manali-keerai

ஈரல் பலப்பட

உடலில் ஈரல் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடுவதோடு, கண்பார்வை கோளாறுகள் உண்டாகும் ஏற்படும். எனவே ஈரலை பலப்படுத்த மணலிக்கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிடுவதுடன், மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும் ஈரல் பலம் பெற்று உடல் நலம் குறைவு ஏற்படாமல் தடுக்கும்.

கிருமிநாசினி

மணலி கீரை இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். மணலி கீரை இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

manali-keerai

நோய் எதிர்ப்பு

மணலி கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டஒரு கீரை வகையாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. ரத்தின் வீரிய தன்மையை அதிகரிக்கிறது.

சிறுநீரகம்

குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்பு படிந்து சிறுநீரக கற்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. மணலி கீரையை பக்குவம் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீர் அடைப்புகள் நீங்கி சிறுநீர் தாராளமாக பிரியும்.

புற்றுநோய்

புற்று நோய்களில் பல வகைகள் உண்டு இதில் அதிகம் பேரை பாதிக்கும் புற்று நோய்களாக வயிற்று புற்று மற்றும் நுரையீரல் புற்று நோய் இருக்கிறது. இந்த புற்றுநோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவாறே மணலி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் புற்று நோயின் கடுமை தன்மை குறைகிறது.

மாதவிடாய் 

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதித உதிரப்போக்கு மற்றும் அடிவயிற்று வலி போன்றவை உண்டாகிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் மணலி கீரையை அதிகம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் போக்குகிறது.