பிரண்டை பயன்கள்
தமிழ் மொழியை வளர்த்த சித்தர்கள் தான் சித்த மருத்துவ முறையையும் உண்டாக்கினர். நமது நாட்டில் இயற்கையிலேயே விளையும் பல மூலிகைகள் குறித்து ஆராய்ந்து, அதற்குண்டான மருத்துவ குணங்களையும் எடுத்து கூறியிருக்கின்றனர். அப்படி சித்தர்களால் மிகவும் போற்றப்பட்ட ஒரு மூலிகை தான் பிரண்டை. இந்த பிரண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
பிரண்டை பயன்கள்
சுறுசுறுப்பு
பிரண்டை தண்டுகளை நன்கு பக்குவப்படுத்தி சாப்பிடும் போது உடலுக்கு சிறந்த பலத்தை தருகிறது. பிரண்டையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல இருக்கிறது. இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல உற்சாகத்தையும், சுறுசுறுப்பு தன்மையையும் கொடுக்கிறது.
தொற்று நோய்கள்
பிரண்டை காரச்சத்து அதிகம் கொண்டது. பிரண்டையை சாப்பிடும் போது அதிலுள்ள காரச்சத்து நமது ரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்களையும், ஜுரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.
பல் நோய்கள்
சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்பதாலும், உடலில் ஏற்படும் சத்துக்குறைபாட்டாலும் பற்களில் சொத்தை ஏற்படுதல், பற்களின் வேர்கள் வலுவிழப்பது, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பிரண்டையை துவையலாகவும், சட்னியாகவும் செய்து சாப்பிட்டு வர பற்கள் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
வாயு கோளாறுகள்
வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
எலும்புகள்
பிரண்டையின் சிறப்பு அம்சமே எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான். எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.
மாதவிடாய்
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்படுவதுடன், அடி முதுகு பகுதி வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். இப்படியான காலங்களில் பிரண்டை தண்டுகளை துவையல், சட்னி, ரசம் போன்ற எந்த பக்குவதிலாவது செய்து சாப்பிட நலம் பயக்கும்.
இதயம்
பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு நன்கு ரத்தம் பாயச் செய்து இதய நலனை பாதுகாக்கிறது.
நீரிழிவு
நீரிழிவு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக பிரண்டை இருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மையே உடலிலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுத்து, நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகிறது.
சுவாச சம்பந்தமான நோய்கள்
பிரண்டை தண்டுகளை நன்கு அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சாறுகளை ஆஸ்த்மா மற்றும் இன்ன பிற நுரையீரல் சம்பந்தமான நோய்களாலால் அவதியுறுபவர்கள் அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்யில் தங்கியிருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றும்.
மூலம்
ஆசானைவாய்க்கருகில் உள்ள சதையிலும், ஆசனவாய்க்குள்ளும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு தான் மூலம்.
மூலம் பாதிப்பால் அவதியுறுபவர்கள் தினமும் சில பிரண்டை துண்டுகள் மற்றும் பிரண்டை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், மூலம் பாதிப்புகள் விரைவிலேயே நீங்கும்.