Advertisement

வரகு அரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

வரகு அரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

அனேகமாக உலகில் இருக்கும் எந்த ஒரு உயிரினமும் சாப்பிடாமல் உயிர்வாழ முடியாது. மனிதர்களும் தாங்கள் உயிர் வாழ பல வகையான உணவுகளை உண்கின்றனர். அதில் பிரதான உணவாக அரிசி இருக்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று தான் வரகு அரிசி எனப்படும் வரகரிசி. இந்த வரகரிசி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

varagu

வரகு அரிசி நன்மைகள்

சிறுநீரகம் 

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

ரத்த ஓட்டம் 

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். வரகரிசியில் ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

varagu

மலச்சிக்கல் 

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து 

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

varagu

ஆண்மை குறைபாடுகள் 

இக்கால ஆண்கள் அதிலும் இளம் மற்றும் நடுத்தர வயதுள்ள ஆண்கள் பலருக்கு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுவதால் ஆண்மை சம்பந்தமான குறைபாடு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் காலை அல்லது மதியம் வேளையில் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெகு சீக்கிரத்திலேயே ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

இதயம்

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

varagu

உடல் எடை குறைப்பு

இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.

நீரிழிவு 

இன்று உலகில் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவத்தில் நமது உடலில் இயற்கையிலேயே சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.

varagu

புரதம் 

வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

புண்கள்

உடலில் பலருக்கும் பல காரணங்களால் புண்கள், காயங்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் வரகரிசியை சாப்பிட்டு வந்தால், அந்த வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.