தினமும் கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன தெரியுமா?
பல வகையான சிறுதானியங்கள் நமது நாட்டில் அதிகம் விளைவிக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் மிகப் பிரபலமான ஒரு சிறுதானியம் கொள்ளு. இந்தக் கொள்ளு பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவது என்பதே பலரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவல்ல ஒரு தானிய தான் கொள்ளு ஆகும். இந்த கொள்ளு பாரதத்தில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மக்களால் அதிகம் உண்ணப்படுகிறது. கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எனவே தான் நம் நாட்டின் பண்டைய மருத்துவ சிகிச்சை முறையான ஆயுர்வேதத்திலும் கொள்ளு பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அந்த கொள்ளு தானியங்களை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கொள்ளு பயன்கள்
உடல் எடை குறைய
உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக கொள்ளு இருக்கிறது. நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நன்றாக பொடி செய்து, அதை தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வருபவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டிற்க்குள் வருகிறது. ஏதேனும் ஒரு உணவு வேளையில் மற்ற உணவுகளைத் தவிர்த்து முளைகட்டிய கொள்ளு சாப்பிட்டு வருவதால் உடல் எடை விரைவில் குறையும்.
அஜீரணம், செரிமான பிரச்சனைகள் தீர
ருசி மிகுந்த உணவுகளை நன்றாக சாப்பிட்ட பிறகு ஒரு சிலருக்கு நெஞ்சுப்பகுதியில் எரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்படுகிறது. இது அஜீரணத்திற்காண அறிகுறியாகும். மேலும் வயிற்றில் சாப்பிட்ட உணவுகளை செரிக்க உதவும் அமிலங்கள் சரி வர உற்பத்தியாகாது, அப்போது சாப்பிட்ட உணவு மீண்டும் தொண்டைக்கு தள்ளப்பட்டு வாந்தி வருவது போன்ற உணர்வை கொடுக்கும். இதை ஆங்கிலத்தில் அசிட் ரீபிளக்ஸ் என்பார்கள். இத்தகைய பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் மேற்கூறிய செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
ஜலதோஷம், ஜுரம் நீங்க
ஜலதோஷம் மற்றும் ஜுரம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். மனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுவிழக்கும் போது மேற்கூறிய நோய்த்தாக்கம் உண்டாகிறது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில் ஜுரம் மற்றும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு ரசம் அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூடான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்றவை வெகு சீக்கிரத்தில் குணமாவதோடு இந்த நோய்களால் உடல் இழந்த பணத்தையும் திரும்ப மீட்டுக்கொடுக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகள் தீர
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி என்பது பெண்கள் மட்டுமே உணர்ந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் முறையற்று வருவதோடு, அதீத ரத்தப் போக்கும் மிகுதியான வலியும் ஏற்பட்டு அவர்களை வெகுவாக களைப்படையச் செய்கிறது. இத்தகைய பிரச்சினைகளில் அவதியுறும் பெண்கள் கொள்ளை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும் என நமது பாரம்பரிய மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது. மாதவிடாய் ஏற்படும் போது உண்டாகும் அதிக எரிச்சல் மற்றும் வலியையும் குறைக்கிறது.
லூகோரியா நோய்
லூகோரியா என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக பருவ வயதை அடைந்த பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் கிருமித் தொற்றால் பிறப்புறுப்புகளில் மற்றும் கருப்பையின் வாய்ப் பகுதியில் அதிக எரிச்சல் மற்றும் வலி ஆகியவற்றை உண்டாக்கி, துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த லூகோரியா பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு கொள்ளு ஒரு சிறந்த இயற்கை நிவாரணம் ஆகும். சிறிதளவு கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அக்கிண்ணத்தில் இருக்கும் நீரோடு கொள்ளு தானியங்களை வேகவைத்து, அந்த நீரை சேமித்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் இந்த லூகோரியா பிரச்சனை விரைவில் தீருகிறது.
சிறுநீரக கற்கள் நீங்க
கால்சியம் ஆக்சலேட் எனப்படும் தாதுப்பொருள் நமது சிறுநீரகத்தில் அதிக அளவு சேர்ந்து விடும் போது சிறுநீரகத்தில் கல்லாக மாறி நமக்கு கடும் துன்பத்தை தருகிறது. கொள்ளு தானியங்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இயற்கையாகவே சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலேயே போகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொள்ளு தானியங்களில் இரும்புச்சத்து மற்றும் பாலிபினால் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் சிறுநீரக கற்களை கரைக்க பெருமளவு உதவி புரிகிறது. எனவே தினமும் இரவில் சிறிதளவு கொள்ளு தானியங்களை ஒரு கிண்ண நீரில் ஊற வைத்து ,மறுநாள் அந்த கொள்ளை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வரவேண்டும். சிறுநீரக கற்கள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள் மேற்கூறிய முறையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் வெகு வேகமாக கரைய உதவி புரிகிறது.
மலச்சிக்கல் தீர
காலையில் எழுந்ததும் கழிவறையில் பலரும் மலம் கழிக்க படாதபாடு படுகின்றனர். இது பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனைக்காண அறிகுறியாகும். மனிதர்களின் உடலில் வயிறு மற்றும் குடல்கள் ஒரே நேர்கோட்டில் இல்லாத போது மலமாக மாறியிருக்கும் திடக் கழிவுகளை வெளியேற்ற ஆசனவாய் குடல் சுருங்கி விரிவதற்கும் சிரமப்படுகிறது. இதைத் தான் மலச்சிக்கல் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொள்ளு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. தினமும் காலையில் சிறிதளவு முளைக்கட்டிய கொள்ளு தானியங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு எப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் விரைவில் தீரும்.
கொலஸ்ட்ரால் நீங்க
எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு வகைகள் நமது ரத்தத்தில் படிவதை தடுக்கும் அரும்பணியை கொள்ளு தானியம் செய்வதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஊறவைக்கப்பட்ட கொள்ளு தானியங்களை தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் ரத்த நாளங்களில் படிந்தி ருக்கின்ற எல்.டி.எல் கொலஸ்ட்ரால் சத்துகள் கொள்ளுவில் தானியங்களில் இருக்கும் லிபிட் எனப்படும் குறைந்த அளவு கொழுப்பு சத்தால் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு உடல்நலனை பேணுகிறது.
கண் நோய்கள் குணமாக
மழைக்காலங்களில் கிருமித் தொற்றுகளால் மெட்ராஸ் ஐ எனப்படும் கஞ்சைக்டிவைட்டிஸ் நோய் பலருக்கும் ஏற்படுகிறது இந்த நோய் ஏற்பட்டால் கண்களை திறக்க முடியாமல் மிகுந்த அவஸ்தை மற்றும் எரிச்சல் கண்களில் ஏற்படுகிறது கொள்ளு தானியத்தை ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகம் உள்ளன எனவே கஞ்சைக்டிவைட்டிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள். இரவில் கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணம் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரை எடுத்து உங்கள் கண்களை கழுவி வருவதால் கண்களின் எரிச்சல் நீங்கி கஞ்சைக்டிவைட்டிஸ் நோயை ஏற்படுத்தி இருக்கும் கிருமிகள் அழிந்து மிக விரைவில் கண்கள் நலம் அடையும்.
நீரிழிவு கட்டுப்பட
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த இயற்கை உணவாக கொள்ளு தானியங்கள் இருக்கின்றன. கொள்ளு தானியங்களில் ஹைப்பர் – கிளைசீமிக் எதிர்ப்பு வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. அதனுடன் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் வேதிப்பொருட்களும் இந்த தானியங்களில் அதிகம் நிரம்பியுள்ளன. கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று, அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே கொள்ளு தானிய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.