தைராய்டு பிரச்சனை நீங்க மருத்துவ குறிப்பு
ஒரு மனிதனின் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராக்சின் எனப்படும் ஹார்மோனை சுரப்பதால் இந்த தைராய்டு நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. இன்று உலகில் பலரும் இந்த குறைபாட்டால் அவதியுறுகின்றனர். இக்குறைபாட்டிற்கு நவீன மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும் இந்த தைராய்டு குறைபாட்டிற்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகள்
கழுத்தில் இருக்கும் நிண நீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு கழுத்தின் இருபுறமும் அளவுக்கு அதிகமான வீக்கம் ஏற்படும் இது பொதுவாக தைராய்டு பிரச்சனையின் பிரதான அறிகுறியாக பார்க்க படுகிறது.
சரியான அளவு உணவு உட்கொண்டாலும் உடல் எடை குறைந்தோ அல்லது கூடிக்கொண்டே போனால் தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
தைராய்டு குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவருக்கு அடிக்கடி உடல் அசதி ஏற்படும்.
இதய துடிப்பின் வேகம் வழக்கத்திற்கு குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாட்டின் ஆரம்பகட்ட அறிகுறியாக கருதலாம்.
சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். மேலும் மலச்சிக்கலும் ஏற்படும்.
தைராய்டு குறைபாட்டிற்கான மருத்துவ குறிப்புக்கள்
ஐயோடின் உப்பு
ஐயோடின் கலக்கப்பட்ட உப்பை உணவில் பயன்படுத்துவது இக்குறைபாட்டை போக்கும்.
பசலை கீரை
பசலை கீரை பல சத்துக்களை கொண்ட ஒரு மூலிகை கீரை ஆகும். இதை அவ்வப்போது உணவாக உண்டு வந்தால் தைராய்டு குறைபாடு நீங்கும்.
பூண்டு
“செலீனியம்” எனப்படும் வேதிப்பொருள் இந்த தைராய்டு குறைபாட்டை சரிசெய்ய வல்லது. இது பூண்டில் அதிகமுள்ளது. எனவே இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தைராய்டு குறைபாடு நீங்கும்.
சோயாபீன்ஸ்
சோயா பீன்ஸ் ஆசியாவில் அதிகம் உண்ணப்படும் பல சத்துகள் மற்றும் மருத்துவ வேதிப்பொருட்களை கொண்ட காய் ஆகும். இப்போது இவை நம் நாட்டிலும் கிடைக்கின்றன. இதுவும் தைராய்டு குறைபாட்டிற்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.