அரை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
இயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிடும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் அதிகம் நோய் தாக்குதல்களுக்கு உள்ளவாதில்லை. இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரை வகைகள் இருக்கின்றன. இதில் அரை கீரை பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அரை கீரை பயன்கள்
அத்தியாவசிய சத்துகள்
உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது.
நோய் எதிர்ப்பு
அரை கீரை பல விதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரை வகையாகும். இந்த கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
வயிற்று புண்கள்
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
ஜுரம், காய்ச்சல்
ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
கல்லீரல்
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.
சிறுநீரகம்
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
கருத்தரித்தல்
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது அரை கீரையை பக்குவம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
புற்றுநோய்
பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அரை கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. ஏற்கனவே புற்று நோய் பாதிப்புகள் உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.
விஷக்கடி
நகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பல வகையான வண்டுகள், பூச்சிகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. இவை சமயங்களில் சிறியவர், பெரியவர்கள் என அனைவரையும் தீண்டி விடுகிறது. இத்தகைய பூச்சிகளின் நச்சை முறிக்கும் திறன் அரை கீரை அதிகம் பெற்றுள்ளது.
ஆண்மை பெருக்கி
இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் அடிக்கடி அரை கீரையை தங்களின் உணவில் சேர்த்து கொள்வதால் ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.