பல்வலி குணமாக உடனடி தீர்வு
நாம் உயிர் வாழ உண்ணும் உணவை நன்கு மென்று தின்றால் தான் அதன் முழு சத்துக்களும் நமது உடலில் சேரும். அப்படி உணவை நன்றாக மென்று தின்பதற்கு நமது வாய்க்குள் இருக்கும் பற்கள் வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பது அவசியம். ஆனால் சிலருக்கு மட்டும் இந்த பற்களில் மிகுந்த வலி ஏற்படுகிறது. அதற்கான காரணத்தையும் மற்றும் மருத்துவ குறிப்புகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
பல்வலிக்கான காரணங்கள்
பல்வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பற்களில் சொத்தை ஏற்பட்டு, அந்த குறிப்பிட்ட பல்லோ அல்லது பற்களோ ஈறுகளை பாதிப்பதால் பல் வலி ஏற்படுகிறது.
மேலும் ஜலதோஷம் பிடித்திருப்பவர்களுக்கு, அவர்களின் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு பல்வலி ஏற்படுகிறது.
பல்வலிக்கான மருத்துவ குறிப்புக்கள்
பல்வலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் கிராம்பு தான். அந்த கிராம்பால் ஆன தைலத்தை பல்வலி உள்ள இடங்களில் சில துளிகளை இட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அருகம்புல் பல வகையான நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. அந்த அருகம்புல்லின் சில கற்றைகளை வாயில் போட்டு நன்றாக மென்று, அந்த சாறு பல்வலி உள்ள இடங்களில் படுமாறு செய்ய பல்வலி குறையும்.
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தை எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து, பல்வலி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
கொய்யா மரத்தின் இலை கொழுந்துகளை நன்றாக மென்று, அந்த இலைகளின் சாறு மற்றும் அதன் சக்கையை, பல்வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ள சிறிது நேரத்தில் பல்வலி குறையும்.
பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்க சர்க்கரை பொருள் அதிகமுள்ள உணவு களை உண்பதை தவிர்க்க வேண்டும். பற்களை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.