பெருஞ்சீரகம் பயன்கள்
நமது நாட்டு பாரம்பரிய சமையலில் தயாரிக்கப்படும் எந்த ஒரு உணவிலும் வாசனை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வாசனை பொருட்கள் என்றாலும் சாப்பிபடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல வித நோய்களை தீர்க்கும் திறன் இப்பொருட்களுக்கு உண்டு. “பெருஞ்சீரகம்” அப்படிப்பட்ட ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். பெருஞ்சீரகம் “சோம்பு” என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
பெருஞ்சீரகம் பயன்கள்
செரிமானம்
பலருக்கும் சமயங்களில் சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. இப்படியான சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி, சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சுவாச நோய்கள்
குளிர்காலங்களில் சிலருக்கு ஜலதோஷம் பீடித்து கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும் போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்கின்றனர். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை அருந்தினால் மேற்கண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.
பால் சுரப்பு
குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு சமயங்களில் குறைந்து விடும். தாய் பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
வாய் துர்நாற்றம்
மாமிச உணவுகள் சாப்பிட்ட போதும், வேறு பல உடல்நல குறைபாடுகளாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டு முடித்த பின்பும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.
சர்க்கரை வியாதி
சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவுப்பொருளாக பெருஞ்சீரகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்கச் செய்வதில் பேருதவி புரிகிறது. எனவே நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது.
நீர்கோர்ப்பு
நீர்கோர்ப்பு அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுக்கும். பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், இந்த நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.
மலட்டுத்தன்மை
இன்றைய காலங்களில் திருமணம் ஆன பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை பிரச்சனை ஆண் – பெண் இருவருக்குமே அதிகம் இருக்கிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு பெருஞ்சீரகங்களையும் சேர்த்து சாப்பிட்டு வருவதால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தை பெற்றெடுக்கும் திறனை ஆண் – பெண் இருபாலரும் பெறலாம்.
கல்லீரல்
உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும். அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள்
பெண்களை மாதந்தோறும் பாடுபடுத்தும் ஒரு இயற்கை அமைப்பு மாதவிடாய் ஆகும். இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி மற்றும் ரத்த போக்கும் அதிகரிக்கிறது. இக்காலங்களில் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
தூக்கம்
நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில் பிரச்சனை உண்டாகிறது. பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.